in

குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் நகராட்சி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுனர்


Watch – YouTube Click

குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் நகராட்சி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுனர்

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் தனியார் பிரியாணி கடையில் நேற்று ஆய்வுக்கு சென்ற நகராட்சி பெண் ஊழியர் பிருந்தா உள்ளிட்ட மூன்று பேர் மீது கடை உரிமையாளரான திமுகவைச் சேர்ந்த அபில் என்பவர் மற்றும் சிலர் சேர்ந்து தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மதியம் முதல் நகராட்சி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக மயிலாடுதுறை காவல்துறையினர் நேற்று அபில் மற்றும் சிலர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர் இருந்தாலும் ஆளுங்கட்சி அழுத்தம் காரணமாக திமுகவினரை காவல்துறையினர் கைது செய்யவில்லை.

இது தொடர்பாக நகராட்சி ஊழியர்கள் சார்பில் நேற்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை நேரில் சந்தித்து நகராட்சி ஊழியர்கள் புகார் செய்திருந்தனர் இந்நிலையில் காவல்துறையின் மெத்தன போக்கை கண்டித்தும் திமுக நிர்வாகிகள் அழுத்தம் காரணமாக ஒரு தலைபட்சமாக காவல்துறை நடந்து கொள்வதை கண்டித்தும் நகராட்சி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 120 பேர் தற்காலிக பணியாளர்கள் எண்பது பேர் அலுவலக ஊழியர்கள் 30 பேர் என 230 பேர் காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் நகராட்சி வாசலில் அவர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஊழியர்கள் போராட்டம் காரணமாக நகராட்சியில் துப்புரவு பணிகள் முடங்கியுள்ளன.


Watch – YouTube Click

What do you think?

பல கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்

அழகர்கோவில் கண்மாயில் நடைபெற்ற சமத்துவ மீன்பிடித் திருவிழா