மயிலாடுதுறையில் நகராட்சி ஊழியர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய விவகாரம், நகராட்சி ஊழியர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் சங்கம், சத்துணவு ஊழியர்கள் சங்கம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் பரபரப்பு,நகராட்சி அலுவலகம் உள்ளே காவல்துறையை கண்டித்து உள்ளிருப்பு மற்றும் தர்ணா போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் தனியார் பிரியாணி கடையில் நேற்று ஆய்வுக்கு சென்ற நகராட்சி பெண் ஊழியர் பிருந்தா உள்ளிட்ட மூன்று பேர் மீது கடை உரிமையாளரான திமுகவைச் சேர்ந்த அபில் என்பவர் மற்றும் சிலர் சேர்ந்து தாக்குதல் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மதியம் முதல் நகராட்சி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மயிலாடுதுறை காவல்துறையினர் நேற்று அபில் மற்றும் சிலர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர் இருந்தாலும் ஆளுங்கட்சி அழுத்தம் காரணமாக திமுகவினரை காவல்துறையினர் கைது செய்யவில்லை.
இது தொடர்பாக நகராட்சி ஊழியர்கள் சார்பில் நேற்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை நேரில் சந்தித்து நகராட்சி ஊழியர்கள் புகார் செய்திருந்தனர் இந்நிலையில் காவல்துறையின் மெத்தன போக்கை கண்டித்தும் திமுக நிர்வாகிகள் அழுத்தம் காரணமாக ஒரு தலைபட்சமாக காவல்துறை நடந்து கொள்வதை கண்டித்தும் நகராட்சி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் ஆட்சி அலுவலகத்தில் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் நகராட்சி ஊழியர்களுக்கு ஆதரவாக அரசு அலுவலர்கள் சங்கம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சத்துணவு அமைப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நகராட்சி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் துறையினர் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
பைட் :-
1,பிருந்தா – தாக்குதலுக்கு உள்ளான ஊழியர்
2,மாநில பொருளாளர் சுவாமிநாதன் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி மாநில சங்கம்
3, மாவட்ட செயலாளர் இளவரசன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்