in

அண்ணாவின் வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது – வீட்டுக் காவலில் உள்ள அய்யாகண்ணு பேட்டி


Watch – YouTube Click

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது எனும் அண்ணாவின் வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது – வீட்டுக் காவலில் உள்ள அய்யாகண்ணு பேட்டி

விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், நெல்லுக்கு இரண்டு மடங்கு லாபம் தர வேண்டும், விவசாயிகள் வாங்கிய வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், மாநில தலைவர் அய்யாகன்னு தலைமையில்
கன்னியாகுமரியில் பிரதமர் மோடியை சந்தித்து மனு அளிக்க இன்று செல்ல இருந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரி செல்ல இருந்த அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 20 க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

தொடர்ந்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசும்போது..,

பிரதமர் மோடியை சந்தித்து இன்று எங்களது கோரிக்கைகளை கூற இருந்தோம். ஆனால் காவல்துறையினர் எங்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வலியுறுத்துகிறோம். ஆனால் மாநில அரசு எங்களை ஏன் தடுத்து நிறுத்துகிறது என தெரியவில்லை. மாநில அரசை ஆளும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விவசாயிகளை போராட்டம் நடத்த விடாமல் தடுக்கக்கூடாது. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என அண்ணா சொன்ன வசனம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாம் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது

காவல்துறையினர் உதவியோடு போலீ மதுபானங்கள் தமிழக பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு