திண்டிவனம் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்த வழக்கில் சிறப்பான தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்களுக்கு நன்றி – திண்டிவனத்தில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் தினேஷ் குமார் பேட்டி.
திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.
இந்தப் பணிகள் துரிதமாக நடைபெறாத நிலையில் தரமான முறையிலும் நடைபெறவில்லை என கூறப்படுகின்றது.
இதனால் இந்த பகுதியில் உள்ள பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என அனைவரும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வந்தனர். மேலும் இந்த பகுதியில் உள்ள வணிகர்களும்பல்வேறு வகை பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வந்தது. இது குறித்து இங்குள்ள பொதுமக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் ,பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் தினேஷ் குமார் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர்கள் திண்டிவனம் பாதாள சாக்கடை திட்ட பணிகளில் உள்ள குளறுபடிகளை வருகின்ற நான்கு வாரங்களுக்குள் சரி செய்து பணிகளை தொடங்கி துரிதமாக செய்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இது குறித்து இன்று திண்டிவனத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜக மாநில இளைஞர் அணி செயலாளர் தினேஷ் குமார் ,திண்டிவனத்தின் ஒட்டு மொத்த குரலாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் என்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு சரியாக முறையில் நீதி வழங்கிய நீதி அரசர்களுக்கு நன்றி என கூறினார் .