அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று, கருத்து கணிப்புகளை தூக்கி எறிந்து விட்டு வாக்கு எண்ணிக்கையின் போது செயல்பட வேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் அறிவுரை.
கழக பொதுச்செயலாளர் அறிவுறுத்தலின்படி நாகை நாகை நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான இரா. காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ்..
நாகை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை சுர்சித் சங்கர்தான் வேட்பாளர் என்று இல்லை. வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் நீங்கள் ஒவ்வொருவரும் வேட்பாளர் என எண்ணி செயல்பட வேண்டும்.
கருத்துக் கணிப்புகளை தூக்கி எறிந்து விட்டு வாக்கு எண்ணிக்கையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
உற்சாகமாக உள்ளே செல்வது போன்று வெளியே வரும் பொழுதும் வர வேண்டும். ஏனென்றால், அதிமுகவில் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று.
உங்களது கவனத்தை திசை திருப்ப திமுகவினர் முயற்சி செய்வார்கள். அதில் அவர்கள் கில்லாடிகள். ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வாக்கு எண்ணிக்கையின் போது செயல்பட வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சுர்சித் சங்கர், அதிமுக நகர கழக செயலாளர் ஆர். டி. மூர்த்தி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.