வந்தவாசியில் சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பாதிரியில் வந்தவாசி எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் கிளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி எக்ஸ்னோரா தலைவர் மலர் சாதிக் தலைமையில் நடைபெற்றது . பாதிரி ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
1972 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5-ஆம் தேதி ஐநா சபையின் மனித சுற்றுச்சூழல் மாநாடு ஸ்வீடனில் நடைபெற்றது. இந்த நாளை கௌரவிக்கும் வகையில் 1973 ஆம் ஆண்டு உலகம் தனது முதல் உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடியது. அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் சிறப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினம் உடனடி பிரச்சினைகளை குறி வைக்கும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் கொண்டாடப்படும் இந்த ஆண்டு நில மீட்பு பாலைவனமாதல் மற்றும் வறட்சி தடுப்பு ஆகியவை கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி,பசுமை காக்கும் முயற்சியாக, எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர்சாதிக் பிறந்தநாளையொட்டி 100 மரக்கன்றுகளை நடும் திட்டத்தில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.
அப்போது பேசிய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்தன், மரங்கள் பெருவாரியாக வெட்டப்படுவதன் காரணமாகவும் புகை மாசு உள்ளிட்ட காரணிகளால் உலகம் வெப்பமயமாகி கொண்டு இதை தடுப்பதற்காக அரசாங்கம் நெடுஞ்சாலைகள் புறவழிச் சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் அரளிகளை நட்டு வருகிறது. இதனால் ஆக்சிஜன் குறைபாடுகள் தவிர்க்கப்படும். பொது மக்களாகிய நீங்கள் உங்கள் வீடுகளில் பலன் தரும் மரங்களை நட்டு வளர்த்தாலே உலகம் பசுமை மயமாகி போகும் அது மனித குலத்திற்கு பெரிய நன்மைகளை செய்யும் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், மனித குலத்திற்கு சுற்றுச்சூழல் மிக அவசியமானது. நான் பணிபுரியும் இடங்களில் குறுங்காடுகளை வளர்த்து பராமரித்து வருகிறேன். பறவைகள் விலங்குகள் ஆகியவை உண்ணும் வகையில் பலவகை செடிகளையும் வளர்த்து பராமரித்து வருகிறேன். இந்த உலகம் என்பது அனைத்து உயிர்களுக்கும் ஆனது. நீங்கள் வீட்டிற்கு ஒரு செடி வைத்து பராமரித்தாலே உலகம் பசுமை மயமாகி போகும். சுற்றுச்சூழல் நாளில் இதுவே நீங்கள் எடுக்கும் முடிவாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், வந்தவாசி பகுதிகளில் அதிக மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எம்பி வெங்கடேசன் ரகுபாரதி ஆகியோருக்கு எக்ஸ்னோரா வந்தவாசி கிளை சார்பில் பசுமை நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எக்ஸோரா துணைத் தலைவர் பா சீனிவாசன், கற்க கசடற பாஸ்கரன், எக்ஸ்னோரா மனோஜ் குமார், ரயில்வே தனசேகரன், சுகாதார மேற்பார்வையாளர் சீதாபதி, ஆசிரியை பூவிழி மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக ஜியா நன்றி கூறினார்.