காவல்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் இருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சைக்கிளில் பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி: நாகை மாவட்ட காவல்துறை சார்பில் மாணவர்களை வரவேற்று மரக்கன்றுகளை வழங்கினார்.
உலகம் முழுவதும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது, அதனை முன்னிட்டு மாவட்ட முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நகர காவல் நிலையத்தில் இருந்து 20க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் சைக்கிளில் பேரணியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதாகை ஏந்தியபடி படி 35 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டனர்.
வழி நடுவிலும் காவல்துறை சார்பிலும் சமூக ஆர்வலர்கள் சார்பிலும் அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
தொடர்ந்து வேளாங்கண்ணியை வந்தடைந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், துணைக் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மாணவர்களை வரவேற்று ஊக்குவிக்கும் விதமாக மரக்கன்றுகளை வழங்கி கௌரவப்படுத்தினர்.