in

மாதத் தவனை செலுத்தாதல் நிதி நிறுவன ஊழியர் பூட்டு போட்ட சம்பவம்


Watch – YouTube Click

மாதத் தவனை செலுத்தாதல் நிதி நிறுவன ஊழியர் பூட்டு போட்ட சம்பவம்

 

விழுப்புரம் அருகேயுள்ள வையலாமூரில் தனியார் நிதி நிறுவனத்தில் மூன்றரை லட்சம் வீட்டு பத்திரத்தினை வைத்து கடன் பெற்ற டைலர் இரண்டு மாதம் தவனை செலுத்தாதல் டைலரையும் மனைவியையும் வீட்டிலிருந்து வெளிதள்ளி நிதி நிறுவன ஊழியர் பூட்டு போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

விழுப்புரம் அருகேயுள்ள வையலாமூர் கிராமத்தை சார்ந்த கந்தவேலு என்பவர் பை ஸ்டார் நிதி நிறுவனத்தில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் வீட்டு பத்திரத்தை வைத்து இரண்டரை லட்சம் கடன் பெற்று தவணை சரியாக கட்டி வந்துள்ளார்.

அதன் பின்னர் கூடுதலாக ஒரு லட்சம் கடனும் பெற்ற நிலையில் கொரனோ காலகட்டத்தில் நான்கு மாதங்கள் கடன் தவனை செலுத்த முடியாமல் போய் உள்ளது.

அதன் பிறகு கடன் பெற்ற தொகைக்கான பணத்தை மாத தவனையாக கந்தவேலு கட்டி வந்துள்ளார். இதுவரை ஆறு லட்சம் வரை கட்டி வந்துள்ளார். கந்தவேலு இரண்டு மாதங்கள் மாத தவனையை கட்ட முடியாமல் போனதால் (பைவ் ஸ்டார்) தனியார் நிதி நிறுவன ஊழியர் இன்று கந்தவேலுவின் வீட்டிற்கு சென்று வீட்டில் இருக்க முடியாது கடன் தவனையை உடனே கட்டு என கூறியுள்ளார்.

தவனை கட்டுவதற்கு அவகாசம் கொடுக்க முடியாது உடனே கட்ட சொல்லி நிர்பந்தித்துள்ளார். பணம் இல்லாததால் இரண்டு நாட்களில் கட்டிவிடுவதாக கந்தவேலு கூறிய போதிலும் நிதி நிறுவன ஊழியர்கள் இன்றைய தினம் கந்தவேலுவின் மனைவி மற்றும் டைலரான கந்தவேலுவை வீட்டிலிருந்து வெளியே தள்ளிவிட்டு கதவினை பூட்டு போட்டு பூட்டியுள்ளனர்.

இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் வீட்டின் வாயிலையே கடன்பெற்ற கந்தவேலுவும் அவரது மனைவியும் அமர்ந்திருந்தனர். இச்சம்பவம் குறித்து கந்தவேலு கானை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை செய்து வீட்டின் கதவை திறக்க கூறியதை தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு பிறகு நிதி நிறுவன ஊழியர்கள் கந்தவேலுவின் வீட்டின் கதவை திறந்து விட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன சோதனை  மதுபானங்கள் பறிமுதல்