நோயோடு போராடிருக்கும் என்னை தனியா விட்டு…ட்டு போய்ட்டாரு
ஆன் ஸ்கிரீனில் முறுக்கு மீசையுடன் கோபம் கொப்பளிக்கும் முகத்துடன் இருக்கும் பல நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் சாந்தமாகவும் அமைதியான குணத்துடனும் இருப்பவர்கள் நிறைய பேர் மறைந்து நடிகர் செந்தாமரை கூட அப்படிப்பட்ட தான் திரையில் தான் அவர் வில்லன் ஆனால் நிஜ வாழ்க்கையில் அன்பான கணவர் அவரைப் பற்றி அவர் மனைவி நடிகை கௌசல்யாவை அண்மையில் ஒரு பேட்டியில் கூறியதாவது .
செந்தாமரை சிவாஜி கணேசன் எம்ஜிஆர் காலம் தொடங்கி 90’s நடிகர்களின் படங்களிலும் வில்லனாக நடித்தவர் நான் அவரை 17 வயதில் திருமணம் செய்து கொண்டேன் திருமணத்திற்கு பிறகும் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும் ஆரம்பத்தில் என்னுடைய கணவருக்கு என்னை பிடிக்காது எனக்கு என்னை அவரை பிடிக்காது .நான் தேவமகன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினேன் அந்த படத்தில் இவரும் வில்லனாக நடித்தார் முதல் சந்திபிளேயே இருவரும் சண்டை போட்டுக் கொண்டோம் .
பிறகு சிவாஜி நாடகம் ஒன்றில் இருவரும் சந்தித்து கொண்டு பொழுது மோதலில் ஆரம்பித்தது தான் எங்களின் காதல் எங்களுக்கு மூன்று குழந்தைகள் ஆனால் அவர் என்னையும் சேர்த்து நான்கு குழந்தை என்று சொல்வார் அந்த அளவிற்கு என்மேல் அதிக பாசம் ஆனால் நான்தான் அவரிடம் அடிப்படை சண்டை போடுவேன் அவர் வீட்டில் இருந்தால் நான் எந்த வேலையும் செய்ய மாட்டேன் அவர் கூடவே மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பேன் எனக்கு ஒரு முறை உடல் நலம் சரியில்லாத போது என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்
மருத்துவர்கள் என் உடம்பில் பல நோய்கள் இருக்கிறது என்று கூற விரைவில் நான் இறந்து விடுவேனா என்று கேட்டபோது என்னை அணைத்துக் கொண்டு கதறி அழுதார் அவர் உடம்பில் எந்த நோயும் இல்லை திடீரென்று மாரடைபால் இறந்துவிட்டார் வெளி உலகமே தெரியாத என்னை அம்போஇன்னு விட்டு சென்று விட்டார் என்று கண்ணீருடன் பேட்டியை முடித்தார்