இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா சார்பில் கண்டன முழக்கமிட்ட சிறுவர் சிறுமியர்கள்
இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மதுரை மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்வர்களை போல தத்ருபமாக ரத்தம் வடிய காயங்களுக்கு கட்டு போட்டது போல வேடம் அணிந்து கண்டனம முழக்கமிட்ட சிறுவர் சிறுமியர்கள்
ரஃபா பகுதியில் உள்ள அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசி குழந்தைகள் உள்ளிட்ட 50க்கும் மேலானவர்களை கொன்று குவித்துள்ள இஸ்ரேலின் செயலை கண்டித்தும் காஸாவில் நடந்த படுகொலைகளை விட உச்ச பட்ச அத்து மீறல் நடந்துள்ளதாக கூறி மதுரை கிரைம் ப்ரான்ச் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஆத் மதுரை மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில்.
1000த்திற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட , ஆண்கள் , சிறுவர்கள் , சிறுமியர்கள் என சுமார் 2000 நபர்கள் இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில்.
பெண்கள் கைகளில் பதாகைகளை ஏந்திய நிலையில் தொடர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.