சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் புதுச்சேரியில் ஆலோசனை வழங்கினார்
புதுச்சேரியில் சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர்கள் புதுச்சேரியில் ஆலோசனை வழங்கினார்.
சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நரம்பியல் சிகிச்சை நிபுணர் ஸ்ரீகாந்த் சீனிவாசன், மூப்பியல் மருத் துவத்துறை டாக்டர் பிரியங்கா, ராணா பத்கிரி ஆகியோர் இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, புதுச்சேரி எல்லைப்பிள் ளைச்சாவடி100 அடி சாலையில், என்.டி., மகால் எதிரில் உள்ள அப் போலா மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்கினார்கள்..
நரம்பியல் சிகிச்சை நிபுணர் ஸ்ரீகாந்த் சீனிவாசன், தலைவலி, மூளை தாக்கம், மயக்கம், துாக்கம் கலைதல், கிறுகிறுப்பு , தலைசுற்றல், மறதி பிரச்னை, மயக்க நிலை, நடப்பதில் தடுமாற்றம் அல்லது சிரமம், நடுக்குவாதம், சுய உணர்வு இழத்தல், கழுத்து வலி, சிறு நடுக்கம், கீழ் முதுகு வலி, கை கால்களில் எரிவது அல்லது – குத்துவது போன்ற பிரச் – னைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
டாக்டர் – ராணா பிரியங்கா பக்கிரியிடம், எலும்பு மெலிதல், எலும்புகள் மென்மையாதல் அல்லது பலவீனமாதல், வீழ்தல் மற்றும் மயக்க நிலை, தலை சுற்றல், நினைவாற்றல் குறைதல், குழப்பம், முதுமையில் ஏற்படும் மறதி, தடுமாற்றம், உளச்சோர்வு, உணவு முறை ஆலோசனை, நோய் தொற்றுகளை தடுப்பதற்கான தடுப்பூசி, உடல் இயக்க பயிற்சி, சமநிலைப் பிரச்னைகள், தடுமாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது இதில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆலோசனை பெற்றனர்.