திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆட்சித் தலைவர் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் முரளிதர் ஆய்வு
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தமிழக அரசின் சார்பில் இலவச கழிப்பிடங்கள் தங்கும் அறைகள் கட்ட இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் முரளிதர் ஆய்வு.
திருவண்ணாமலை உலகப் பிரசித்தி பெற்ற கிரிவலப் பாதையை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதர் தலைமை அலுவலக திருப்பணி இணை ஆணையர் ஜெயராமன் அண்ணாமலையார் கோவிலின் இணை ஆணையர் ஜோதி மண்டல இணை ஆணையர் சுதர்சன் அண்ணாமலையார் கோவிலின் மேலாளர் செந்தில் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கிரிவலப் பாதையில் ஆய்வு பணியை மேற்கொண்டார்கள்.
மாதம் தோறும் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த நிலையில் தற்போது 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை தமிழ்நாடு ஆந்திரா கேரளா தெலுங்கானா கர்நாடகா மகாராஷ்டா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மாதம் தோறும் பௌர்ணமி தினத்தன்று உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலத்தை மேற்கொள்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது தினமும் சுமார் 10 முதல் 15 ஆயிரம் வரை ஆந்திரா பக்தர்கள் இரவு முழுவதும் கிரிவலம் வர தொடங்கியுள்ளார்கள் இந்நிலையில் கிரிவலப் பாதையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்களுக்கான கழிப்பறை வசதிகள், பக்தர்களுக்கான ஓய்வறைகள், அன்னதான கூடங்கள் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இடங்களிலும், வருவாய் துறைக்கு சொந்தமான இடங்களிலும், அன்னதான கூடம், பக்தர்களுக்கான ஓய்வறைகள், கழிப்பறை வசதி, மற்றும் பார்க்கிங் வசதிகள் அமைப்பது குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்கள்.