in

அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் வெளிச்சம் திட்டத்தின் கீழ் சிறப்பு கண் மருத்துவ முகாம்


Watch – YouTube Click

அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் வெளிச்சம் திட்டத்தின் கீழ் சிறப்பு கண் மருத்துவ முகாம்

 

அரசு பள்ளிகளில் படிக்கும் பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு அரசின் வெளிச்சம் திட்டத்தின் கீழ் சிறப்பு கண் மருத்துவ முகாம் நடத்தி சிகிச்சை அளிப்பதாக தனியார் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் சிபு வர்க்கீ மதுரையில் பேட்டி

மதுரை குட் ஷெட் தெருவில் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை புதிய கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த மருத்துவ மனையை மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை தாளாளர் மருத்துவர் கே.பி.ரெட்டி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

மருத்துவமனை திறப்பு விழாவில் முதன்மை தலைமை இயக்குனர் முருகேசன் , மருத்துவ இயக்குனர் சிபு வர்க்கீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

மருத்துவ இயக்குனர் சிபு வர்க்கீ செய்தியாளர்களிடம் பேசும்போது

மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனையின் 50-வது கிளை இன்று மதுரை ஆரம்பித்துள்ளதாகவும்

கடந்த வருடம் தமிழ்நாடு அரசுடன் வெளிச்சம் என்ற திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். அந்த திட்டத்தின் படி தமிழ்நாடு முழுவதும் 100 கண் மருத்துவமனைகள் ஆரம்பிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதில் 50 சதவீதம் பெரிய கண் மருத்துவமனையும், 50 சதவீதம் சிட்டி சென்டர் (பார்வை மையம்) ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

முதல் கட்டமாக மதுரையில் இந்த விஷன் சென்டர் ஆரம்பித்துள்ளோம். இந்த சென்டரில் முதல் கட்ட கண் மருத்துவ பரிசோதனை செய்யப்படும்‌. கண்ணில் ஏதாவது பெரியளவில் பிரச்சினைகள் இருந்தால் எங்களது தலைமை மருத்துவமனைக்கு நோயாளிகள் பரிந்துரைக்கப் படுவார்கள்.

வருங்காலங்களில் சிட்டி சென்டர் வரும் கன நோயாளிகளின் கண் நோய் சம்பந்தமாக தலைமை மருத்துவ மனையில் இருந்தே கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் என்ன என்பதை பரிசோதனை மற்றும் சிகிச்சை சம்பந்தமாக மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

அறுவை சிகிச்சை மற்றும் லேசர் சிகிச்சை தவிர மற்ற கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிட்டி சென்டரில் சிகிச்சை அளிக்கப்படும்.

தமிழ்நாட்டில் திருச்சி, சேலம், கோவை, மதுரை, தஞ்சாவூர் ஆகிய ஐந்து இடங்களில் மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதோடு அதோடு சில நகர் பகுதிகளில் சிட்டி செண்டர் மருத்துவமனை துவங்க உள்ளோம் என்றார்.

நவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் கொண்டு கண் நோய்க்கு சிகிச்சை அளித்து வருகிறோம் பெரிய நகர மட்டுமல்லது சிறிய கிராமங்களுக்கும் அதில் நவீன தொழில்நுட்பத்தோடு சிகிச்சை அளித்துவருவதாகவும்.

தமிழ்நாடு அரசின் வெளிச்சம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரிலும் மாதம் 5000 நோயாளிகளுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். இதுவரை ஒன்றரை லட்சம் நோயாளிகளுக்கு கண் மருத்துவம் பார்த்துள்ளோம் என தெரிவித்தார்.

முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட இன்சூரன்ஸ் திட்டங்களிலும் கண் மருத்துவம் பார்ப்பதாகவும் கூறினார்.

கன்புரை, நீர் அழுத்தம், மார்க்கண், விழித்திரை பாதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளிட்ட எல்லா கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் தமிழக அரசின் வெளிச்சம் திட்டத்தின் கீழ் மருத்துவம் பார்த்து வருவதாகவும் கூறினார்.

மேக்ஸ் விஷன் மருத்துவமனை உள்ள எல்லா சென்டர்களில் அதனை சுற்றி இருக்கும் கிராமப்பகுதிகளில் கண் மருத்துவ முகாம் நடத்தி கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அரசு அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகள், மாநகராட்சி அலுவலகங்கள், அரசு பள்ளிகள் உள்ளிட்ட பகுதிகளில் கண் மருத்துவ முகாம் நடத்தி வருவதாகவும் கூறினார்.

கொரோனோவுக்கு பின்னர் நடந்த ஆராய்ச்சியில் கண் பார்வை குறைவுக்கு செல் போன் பயன்படுத்துவது தான் காரணம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

பள்ளி சிறுவர்கள் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்காக பள்ளிகளுக்கே சென்று மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம். கண் பார்வை குறைப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ள மாணவர்களை கண்டறிந்து மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து சிகிச்சை அளித்து வருகிறோம். கண்ணாடி கொடுத்து சரி பண்ண முடியாது என்பதால் வாழ்க்கை முறையை மாற்றுவதற்கு பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்குவதாக தெரிவித்தார்.

பள்ளி செல்லும் சிறுவர்கள் செல்போன் பயன்பாட்டை குறைப்பதற்காக வீட்டுக்குள்ளே இருக்கும் குழந்தைகளை வெளியே கொண்டு வந்து விளையாட வைக்க ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். அதோடு மையோப்பியா என்று சொல்லக்கூடிய பார்வை குறைப்பாடு உள்ள குழந்தைகளுக்கு பிரத்யோக கண்ணாடியும் வழங்கி வருகிறோம்.

அதற்காக பார்வை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சிறப்பு கண் மருத்துவ முகாம் நடத்தி பார்வை குறைப்பாடு உள்ள மாணாக்கர்களுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

விரைவில் தலைகள் சிதறும் எஸ்பி புகைப்படத்துடன் மிரட்டல்

மயிலாடுதுறையில் பத்தாம் பகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா