கூலி ஷூட்டிங் ஆரம்பிக்காதது ஏன்?
ரஜினிகாந்த் வேட்டையன் படபிடிப்பு முடிந்த கையோடு கடந்த வாரம், இமயமலைக்கு தனது ஆன்மீக பயணத்தை மேற்கொள்வதற்காக டேராடூனுக்கு புறப்பட்டார்.
ஆன்மிக ஆர்வலரான அவர் ஓவ்வொரு படத்தை முடித்த பிறகும் இமயமலைக்கு சென்று விடுவார், உடல் நிலை கோளாறு’ காரணமாக அடிக்கடி செல்வதுஇல்லை.
சமீபத்தில் இமயமலை சென்ற ரஜினிகாந்த், பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்களுக்கு சென்றவர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜூன் 3.ஆம் தேதி சென்னை திரும்பியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கம் கூலி படத்தில் ரஜினிகாந்த்துடன் சத்யராஜ், சுருதிஹாசன் உள்ளிட்டோர் நடிப்பதாகவும், படப்பிடிப்பு இந்த மாதம் பத்தாம் தேதி தொடங்குவதாக இருந்ததால் தனது ஆன்மீக பயணத்தை விரையில் முடித்து ரஜினி சென்னை வந்தார்.
ஆனால் இப்ப படத்தின் சூட்டில் இன்னும் தொடங்கவில்லை இந்த மாதத்தின் இறுதியில் அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் ஷூட் ஆரம்பிக்கும் என்று பட குழு தெரிவித்துள்ளது முதல் கட்ட படப்பிடிப்பாக சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடத்த முடிவு செய்துள்ளார் லோகி.