in

நிறுத்தாமல் செல்லும் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம்


Watch – YouTube Click

நிறுத்தாமல் செல்லும் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம்

 

வேடசந்தூரில் பெண்களைக் கண்டால் ஓசி டிக்கெட் என்று நிறுத்தாமல் செல்லும் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்திய கிராம மக்கள்

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் கல்வார்பட்டி ஊராட்சியை சேர்ந்த கிராமம் சிங்கிலிக்காம்பட்டி. இந்த கிராமத்திற்கு அரசு பேருந்து சென்று வருகின்றது. இந்த கிராமத்திற்கு அரசு பேருந்து சென்றது.

அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம பெண்களிடம் கேட்ட பொழுது எங்கள் ஊருக்கு வரும் அரசு பஸ் பெண்கள் ஓசி டிக்கெட் என்று பெண்களை பஸ்ஸில் ஏற்ற மறுப்பதாகவும் ஸ்டாப்பில் நிறுத்தாமல் தூரத்தில் நிறுத்துவதால் பெண்கள் ஓடி சென்றாலும் கண்டுகொள்ளாமல் பஸ்ஸை எடுத்து சென்று விடுவதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் கர்ப்பிணி பெண் பஸ்ஸில் ஏற ஓடிய பொழுது பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டி சென்றதால் கல்தடுக்கி விட்டு கர்ப்பிணி பெண் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதை செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரின் செல் போனை பிடுங்கி பஸ் கண்டக்டர் உடைத்து விட்டதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பஸ்ஸை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது சம்பவ இடத்திற்கு வந்த கூம்பூர் சப் இன்ஸ்பெக்டர் அரசு பஸ்சை சிறை பிடித்தவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அதன் பிறகு இனிமேல் இவ்வாறு தவறுகள் நடக்காது என்று டிரைவர் கண்டக்டர்கள் வாக்குறுதி அளித்ததை அடுத்து வியாழக்கிழமை ஒரு மணி நேரம் கழித்து கிராம மக்கள் பேருந்தை விடுவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

2029 ஆம் ஆண்டுக்குள் வரி வருவாய் மூலம் 8.6 பில்லியன் பவுண்ட் ஈட்டப்படும்  எதிர்க்கட்சி வாக்குறுதி

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு செஞ்சி வார சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்