in

CPI நல்லகண்ணு சகோதரி மகளின் உடல் உறுப்புகள் தானம்


Watch – YouTube Click

CPI நல்லகண்ணு சகோதரி மகளின் உடல் உறுப்புகள் தானம்

 

நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் மணி சேகர். இவரது மனைவி அரசம்மாள் (வயது 59). இவருக்கு வாய் பேச முடியாது. காதும் கேட்காது. மாற்றுத்திறனாளியான இவர் பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பகுதியில் உள்ள காது கேளாதோர் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 10-ந்தேதி தனது உறவினர் ஒருவருடன் மொபட்டில் தாழையூத்து ரேஷன் கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பின்னால் இருந்த அரசம்மாள் தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் காயத்துடன் நெல்லை அரசு அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மூளை சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறவினர்கள் முடிவெடுத்தனர்.

அதன் அடிப்படையில் அவரது உடலில் இருந்து கருவிழிகள், தோல்கள், கல்லீரல் உள்ளிட்ட பாகங்கள் எடுக்கப்பட்டன.

பின்னர் அவர் உடல் அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி பாலன் மேற்பார்வையில் கல்லீரல் திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கும், தோல்கள் மதுரை மருத்துவமனைக்கும், அனுப்பி வைக்கப்பட்டன. கருவிழிகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசம்மாளின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் நெல்லை அரசு மறுத்துக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

மூளை சாவு அடைந்த பெண் மாற்றுத்திறனாளி உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவது தமிழகத்திலேயே முதன் முதலாக நெல்லையில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இறந்த அரசம்மாள் இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் சகோதரி மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் அதிர்ச்சி

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட திட்டத்தால் நாகை விவசாயிகள் வேதனை