in

களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச்சந்தை 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை


Watch – YouTube Click

களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச்சந்தை 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

 

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய திருமங்கலம் ஆட்டுச்சந்தை – 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். தென் மாவட்ட அளவில் புகழ் பெற்ற இந்த ஆட்டுச்சந்தையில் தீபாவளி, பொங்கல் மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் ஆடுகள் விற்பனைக்கு வரும்.

வரும் 17 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை திருமங்கலம் ஆட்டுச்சந்தை பக்ரீத் ஸ்பெஷல் சந்தையாக நடந்தது. ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. தமிழகம் தவிர ஆந்திரா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி திருமங்கலம், மதுரை, விருதுநகர், தேனி, கம்பம், வாடிப்பட்டி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் ஆடுகளை வாங்க குவிந்துள்ளனர்.

அதிகாலை காலை 4 மணி முதலே ஆட்டுச்சந்தை விற்பனை களைகட்டியது. இங்கு 10 ஆயிரம் ஆடுகள் முதல் 20 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனை செய்யப்பட்டன. பக்ரீத் முன்னிட்டு 4 மணி நேரத்தில் தற்போது வரை ரூ‌3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட திட்டத்தால் நாகை விவசாயிகள் வேதனை

அனுமதி இல்லாமல் சட்டாம்பிள்ளை தனமாக ஒரு தனியார் போல கேரளா அரசு செயல்படுகிறது