in

குவைத்தில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த செஞ்சியை சேர்ந்த முகமது ஷரீப் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

குவைத்தில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த செஞ்சியை சேர்ந்த முகமது ஷரீப் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

 

குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் நடந்த திடீர் தீ விபத்தில் தமிழ்நாட்டில் சேர்ந்த ஏழு தமிழர்கள் உள்ளிட்ட 49 – க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

50க்கும் மேற்பட்டோர்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று குவைத்தில் இருந்து ராணுவ விமான மூலம் கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அங்கிருந்து உடல்கள் அனைத்தும் அவரவர் சொந்த மாவட்டத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் தியாகி இப்ராஹிம் தெருவை சேர்ந்த சேர்ந்த முகமது ஷரீப் என்பவர் உடல் கொச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சிக்கு கொண்டு வரப்பட்டது.

தீ விபத்தில் உயிரிழந்த முகமது ஷாரிப்பின் உடல் மற்றும் அவரது பாஸ்போர்ட்டை அவரது மனைவி அஷரபுன்னிசாவிடம் செஞ்சி வட்டாட்சியர் ஏழுமலை ஒப்படைத்து அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் தீ விபத்தில் உயிரிழந்த முகமது ஷரிப்பின் உடலைப் பார்த்து அவரது மனைவி அஷ்ரபுன்னிசா உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

What do you think?

குவைத் தீ விபத்தில் இருந்த திருச்சியை சேர்ந்தவர் உடல் சொந்த ஊருக்கு வருகை

இவருமா Goat படத்தில் இணைத்திருக்கிறார்