in

செங்கம் அடுத்த காயம்பட்டு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை

செங்கம் அடுத்த காயம்பட்டு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை

 

செங்கத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரு பெண் மற்றும் 3 இளைஞர்கள் கைது ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த காவல் துறையினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செங்கம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் நஸ்ருதீன், பூங்காவனம், குற்றப்பிரிவு இரு காவலர்கள் சந்தேகம் ஏற்படும் விதமாக சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களை விசாரணை செய்த போது அவர்கள் திருவண்ணாமலை கல்நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணா (18), சூர்யா (17) சஞ்சய் (22) ஆகிய 3 இளைஞர்களிடம் இருந்து 2 கிலோ ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்த காவல் துறையினர் பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலை கல்நகர் பகுதியில் உள்ள சகுந்தலா (75) என்பவர் செங்கம் பகுதியில் கொடுத்துவிட்டு வர அனுப்பியதாக காவல்துறையினர் விசாரணையில் மூவரும் கூறிய பின்னர் விரைந்து சென்ற செங்கம் காவல்துறையினர் சகுந்தலாவை கைது செய்து அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆந்திரா பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வரும் ஆகாஷ் என்பவர் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள நிலையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக உள்ள ஆகாஷை தேடி வருகின்றனர்.

What do you think?

விஷவாயு குறித்து செய்தியாளர்களை சந்தித்து துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் பேட்டி

விஷவாயு குறித்து செய்தியாளர்களை சந்தித்து வைத்திலிங்கம் எம்பி பேட்டி