திண்டுக்கல்லில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு முறைகேட்டினை கண்டித்து திண்டுக்கல் மாநகர் காங்கிரஸ் கட்சி சார்பில் தீப்பந்த ஆர்ப்பாட்டம் நாகல்நகரில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் வேங்கை ராஜா, மண்டல தலைவர் கார்த்தி, மாவட்ட மூத்த துணை தலைவர் ராஜாமைதீன், விவசாய சங்க தலைவர் நிக்கோலஸ், நிர்வாகிகள் அப்துல் ஜபார், எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் காளிராஜ், பகுதி கழக செயலாளர் நாகலட்சுமி, கவுன்சிலர் பாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் பேசியதாவது: மோடி அரசாங்கம் நீட் தேர்வில் மெகா மோசடி செய்துள்ளது. ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் தான் அதிக அளவு மோசடி நடந்துள்ளது. மோடி தற்போது மக்களை ஏமாற்றி வருகிறார்.
நீட் தேர்வு மோசடியில் அவருக்கும் தொடர்பு இருக்கிறது. பிஜேபி அரசாங்கம் நெடுநாள் நீடிக்காது.மக்களை ஏமாற்றும் செயல் பலிக்காது. இறுதியில் கையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன கோஷம் எழுப்பினர்.