in

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு நாளை தொடங்கப்பட உள்ளது


Watch – YouTube Click

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வு நாளை தொடங்கப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் இரண்டு கட்ட அகழாய்வு நிறைவு பெற்றுள்ள நிலையில் 3-ம் கட்ட அகழாய்வு நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது.இதையடுத்து தமிழக அரசு பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தது.மக்களவை தேர்தல் காரணமாக மூன்றாம் கட்ட அகழாய்வு பணி துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது அகழாய்வு பணிகள் துவங்குவதற்கன முன் ஆயத்த பணிகள் துவங்கியுள்ளது.
மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்வதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதனை சுத்தப்படுத்தி அளவீடு செய்வது,ஏற்கனவே நடைபெற்ற 2-ம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட அகழாய்வு குழிகளை மூடுவது உள்ளிட்ட பணிகள் அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வரும் ஜூன் முதல் வாரம் அகழாய்வு மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை துவங்க வாய்ப்புள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்திருந்தனர் .
இந்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு .க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

.முன்னதாக நடைபெற்ற முதலாம் கட்ட அகழாய்வில் 3254 தொல் பொருட்களும்,2-ம் கட்டத்தில் 4660 பொருட்கள் என இதுவரை 7914 தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

தேவகோட்டை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் 36 ஜோடி மாடுகள் பங்கேற்பு.

கலை மாமணி திரைப்படநடிகர் பாடகர் டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழா