in

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு திருவாவடுதுறை ஆதீன மடாதிபதியை சந்தித்து அருள் ஆசி


Watch – YouTube Click

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு திருவாவடுதுறை ஆதீன மடாதிபதியை சந்தித்து அருள் ஆசி

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சோபன் பாபு தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

மேலும் விஷ்ணு மஞ்சு, மோகன் லால், பிரபாஷ், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள கண்ணப்பா திரைப்படத்தை மோகன் பாபு தயாரித்துள்ள நிலையில் படம் வெற்றி பெற வேண்டி திருமூலர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு மேற்கொண்டார்.

பின்னர் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.

தொடர்ந்து பிரசாதம் மற்றும் நினைவு பரிசு வழங்கிய ஆதீனம் படம் வெற்றி பெற வேண்டி அருளாசி வழங்கினார்.


Watch – YouTube Click

What do you think?

விசை படகில் இருந்த 3 லட்சம் மதிப்புள்ள காப்பர் புரபுலர் மோட்டார் திருட்டு

புதுச்சேரியில் மின்கம்பம் விழுந்து பலியான இளைஞரின் குடும்பத்திற்கு 10 லட்சம்