மதுபான கடைகளும் ரெஸ்ட்ரோபார்களும் அகற்றப்படும் துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
தேசிய மாணவர்ப்படை இயக்குநரகம் சார்பில் “சமுத்திர சக்தி“ கடல் சாகசப் பயணம் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கடல் சாகச பயணம் ஜூன் 7ம் தேதி தொடங்கி இன்று வரை 11 நாட்கள் நடந்தது..
பாய்மர படகில் புதுச்சேரியிலிருந்து கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்காலை இக்குழு அடைந்தது. அங்கிருந்து மீண்டும் அதே வழியில் புதுச்சேரி திரும்பினார்கள்.. 3 பாய்மரபடகில் 60 என்சிசி மாணவ, மாணவியர் பயணித்தனர்.
இதன் நிறைவு விழா புதுச்சேரி மீன்பிடித்துறைமுகத்தில் நடந்தது.
பாஸ்கர் எம்எல்ஏ தலைமை ஏற்க தேசிய மாணவர்ப்படை இயக்குநரகம் சார்பில் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் “சமுத்திர சக்தி“ கடல் சாகசப் பயணம் நிறைவு நிகழ்ச்சி நடந்தது. இதில் துணைநிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று என்சிசி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், போதை பழக்கத்தில் இருந்து மாணவர்கள் விடுபட என்சிசி போன்ற அமைப்புகளில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
ரெஸ்ட்ரோ பார்களை அகற்ற அமைச்சர் வைத்துள்ள கோரிக்கை குறித்து கேட்டதற்கு, புதுச்சேரியில் நீண்ட நெடுங்காலமாக மதுபான கடைகள் உள்ளன.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ரெஸ்ட்ரோபார்கள் அகற்றப்படும். மதுபானத்தை போதைப் பொருளோடு சேர்க்க வேண்டாம். போதைப் பொருளை
தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் அரசு எடுத்துள்ளது. போதைப்பொருட்கள் எங்கிருந்தாலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
அவற்றை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும் குறைந்து வருகிறது என்பதை மக்களின் மூலம் நான் அறிந்து வருகிறேன். போதைப்பொருள் ஒழிக்க நடவடிக்கையில் தொடரும். மக்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடைகள் அகற்றப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு குறித்து திமுகவும் காங்கிரசும் புகார் கூறுவது குறித்து கேட்டதற்கு தமிழகத்தை விட புதுச்சேரியில் மின் கட்டணம் குறைவு தான். தமிழகத்தை விட எந்த இடத்தில் அதிகம் என கூறுங்கள். நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு துறைகளில் எந்த எந்த துறையில் தவறு நடந்தாலும் அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.