வர்ற 24ம் தேதி தான் கடைசி, அமைச்சருக்கு கெடு விதித்த பாமக முக்கிய நிர்வாகி!
ஒட்டன்சத்திரம் அருகே குளத்தை தரிசு நிலமாக அறிவித்து சிப்கோ அமைக்கும் அரசின் முயற்சிக்கு பாமக பொருளாளர் திலகபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகாவில் அமைந்துள்ள கொத்தையம் என்ற கிராமத்தில் தொழிற்பேட்டை ஒன்றை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு அங்கு 70 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் முத்து அரளி குளத்தை தரிசு நிலமாக அறிவித்திருப்பதாகவும், இக்குளமானது கொத்தையம் கிராமம் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பல கிராமத்து இருக்கக்கூடியது என்றும் பாமக பொருளாளர் திலகபாமா குற்றச்சாட்டியுள்ளார்.
நடந்த முடிந்த மக்களவை தேர்தலின் போது தொழிற்பேட்டை அமைப்பதை தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியும், தற்போது திமுக அரசுடன் சேர்ந்து கொண்டு மக்களுக்கு துரோகம் இழைப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரளி முத்து குளத்தை விரைவில் தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர், அமைச்சர் சக்கரபாணி இதனைச் செய்யத் தவறினால் 24ம் தேதிக்கு பிறகு விவசாயிகளுடன் சேர்ந்து 10 க்கும் மேற்பட்ட ஜே.சி.பி இயந்திரத்துடன் இந்த குளத்தை தூர்வாரி விவசாயத்திற்கு பயன்படும் வகையில் பொதுமக்களுக்கு ஒப்படைக்கப்படும் என நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.