மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக முற்றுகை..கைது
புதுச்சேரியில் இம்மாதம் 16 ம் தேதி முதல் வீடுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 45 பைசா, அதிகபட்சம் 70 பைசா என வீடுகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து அதிமுக சார்பில் கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன்
தலைமையில் உப்பளம் தொகுதி சோனாம்பாளையம் மின் துறை தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக அங்கு கூடியவர்கள் ஊர்வலமாக அருகில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுகவினர் கழுத்தில் ஒயர்களை மாட்டி கொண்டு அலுவலகத்தின் கதவை இழுத்து பூட்டி முற்றுகையிட்டனரர்.
இதனால் 50 பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் போலீசார் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செயலாளர் அன்பழகன், நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் விதத்தில் இந்த மின்கட்டண உயர்வினை ஆளும் பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
வீட்டில் உள்ள கொலுசு, நகைகளை மாதம் மாதம் அடமானம் வைத்து தான் தற்போது மின் கட்டடத்தை செலுத்தி வருகிறோம்.. மேலும் கண்டனத்தை உயர்த்தி இருப்பது நடுத்தர மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் கடுமையாக பாதிப்பு என போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் தெரிவித்தனர்.