நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு ரஷியாவில் 8 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு ரஷியாவில் எம்.பி.பி.எஸ். படிக்க 8 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு
ரஷியா கசான் மாநில மருத்துவ பல்கலைக்கழக பொது நோயியல் துறை இணை பேராசிரியர் மதுரையில் தனியார் நச்சத்சதிர விடுதியில் நிருபர்களிடம் கூறிய தாவது.
கடந்த ஆண்டு 5 ஆயிரம் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு ரஷியாவில் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த கல்வி யாண்டில் (2024-25) இந்திய மாணவர்களுக்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷிய அரசு மருத்துவ பல்கலைக்கழ கங்கள் வழங்க உள்ளன. இதற்கான நேரடி மாணவர் சேர்க்சை வருகிற 25-ந்தேதி மதுரையில் நடைபெறுகிறது.
இதில் எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்ட படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் நேரடி சேர்க்கை நடக்கிறது இந்திய தேசிய மருத்துவ கமிஷனின் விதிமுறைகள் மற்றும் வழிகாட டுதல்களை ரஷிய பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே கடைப்பிடித்து வருகின்றன.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக் வேண்டும்.எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
கல்வி கட்டணமாக ஆண்டுக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப் படுகின்றன. தற்போது 30 ரஷிய பல்கலைக்கழகங்களில் சுமார் 25 ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் கடந்த ஆண்டு கல்வி முடித்த மாணவர்களில் 97% பேர் இந்திய அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும் , வங்கி கடன் ஏற்ப்பாடுகளும் கண்காட்சியில் செய்து தரப்படுவதாகவும் தெரிவித்தனர் பேட்டியின் போது வெளிநாடு கக்வி ஆலோசனை குறித்த நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ் பாபு உடன் இருந்தார்.