எங்களையா? இட்லி, வடை, சாம்பார்…ன்னு…னா சொல்ற?
நடிகைகள் மத்தியில் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக தனக்கு பிடித்த வகையில் வாழ்பவர் நடிகர் சுருதிஹாசன்.
இவர் எப்பொழுதுமே சமூக வலைத்தளத்தில் active ..ஆக இருப்பவர் . சுருதியின் ரசிகர் ஒருவர் அவரிடம் இந்திய மொழியில் ஏதாவது பேசுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு கோபம் அடைந்த சுருதிஹாசன் மொழி பேதங்களை என்னால் சகித்துக் கொள்ள முடியாது எங்களை பார்த்து இட்லி, தோசை, வடை, சாம்பார் என்ற பெயரால் அழைத்தீர்கள் என்றால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் இப்படி அவர் கோபமாக கூறியதற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராம்சரணை ஷாருக்கான் இட்லி வடை என்று அழைத்ததற்கு பெரும் சர்ச்சை வெடித்தது.
மேலும் சுருதிஹாசன் கூறியதாவது உங்களால் எங்களை போல் இருக்க முடியாது அதே மாதிரி எங்கள் மாதிரி நீங்கள் இருக்கவும் முயற்சி செய்யாதீர்கள்.
சவுத் இந்தியன் மொழியில் ஏதாவது கூறுங்கள் என்று கூறினீர்கள் அல்லவா வாயை மூடிக்கொண்டு போ என்று தமிழில் குறிப்பிட்டு இருக்கிறார். இவரின் கருத்து தற்போது பரபரப்பாகி ஏற்படுத்தி இருக்கிறது.