in

செயல்பாடு அற்ற ஆட்சி உதாரணமாகவே கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு


Watch – YouTube Click

விருதுநகரில் அதிமுக தேமுதிக சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டதாகவும் செயல்பாடு அற்ற ஆட்சி உதாரணமாகவே கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து வரும் 24-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக அரசை பதவி விலக வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் வரும் 24-ம் தேதி திமுக அரசை கண்டித்து விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அம்மாட்ட அதிமுக அறிவித்திருந்தது.

இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் இன்று சிவகாசியில் உள்ள தனியார் ஹோட்டலில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் தற்போது வரை அனுமதி தரவில்லை. அனுமதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.‌ விருதுநகர் மாவட்ட அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் பத்தாயிரம் பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக தொண்டர்கள் சிறை செல்லவும் தயாராக இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதை கலாச்சாரம் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதனை தடுக்கத் தவறிய திமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் விருதுநகர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தேமுதிக தோல்வி அடைந்தது சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டதாகவும்,

40 கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டு வெற்றி பெற்று விட்டோம் என கூறுவது பெரிதல்ல நான்கு கட்சிகளை கூட்டணியாக வைத்துக்கொண்டு மிகப்பெரிய ஓட்டு வங்கியை பெற்றுள்ளோம் எனவும் அதிமுக அடைந்தது தோல்வியும் அல்ல திமுக அடைந்தது வெற்றியும் அல்ல எனவும்,

வெற்றியை கண்டு சந்தோஷப்பட கூடியவர்கள் அல்ல அதிமுகவினர். தோல்வியை கண்டு துவண்டு போகக்கூடியவர்களும் அல்ல . மீண்டு வருவோம்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது உறுதி எனவும் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி உயிரிழப்பு திமுகவுக்கு மிகப்பெரிய இழிவு.

அதிமுக அரசு பல்வேறு நல திட்டங்களை கொண்டு வந்தது. திமுக கொண்டு வந்தது கள்ள சாராயம்.

குடிப்பதை ஊக்கப்படுத்துவதற்காக பணம் கொடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்கப்படுகிறது அதில் தவறில்லை எனவும் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

உழைக்க வேண்டாம்? குடிகாரனாக இருந்தால் போதுமா? நடிகை கஸ்தூரி கேள்வி

பாகுபாடான உயர் ஜாதி அரசியலை பாஜக செய்கிறது விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேச்சு