in

தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் திருச்சி ஆட்சியர்


Watch – YouTube Click

தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் திருச்சி ஆட்சியர்

 

தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்- மருத்துவமனைகளில் இருந்து ஸ்பிரிட் விற்கப்படுவது தெரிந்தால் மருத்துவமனை மூடப்படும் திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான குறை தீர்ப்பு முகாமை தொடங்கி வைத்து பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாவட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கடுமையான சோதனையில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மெத்தனால் பயன்பாடு என்பது தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடியது. முக்கியமாக பெயிண்ட் தொழிற்சாலை பயன்படுத்தக் கூடியதால் தொழிற்சாலைகளை கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதற்கான அளவுகளையும் அவர்கள் வாங்கி உள்ள மொத்த அளவு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மிக முக்கியமாக என் டி ஆர் சி மூலம் ஸ்பிரிட் மருத்துவமனைகளுக்கு வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுடைய இருப்பு விவரங்களை அதிகாரியிடம் முழுமையாக தெரிவிக்க வேண்டும். அதில் ஏதும் தவறு நடந்திருந்தால் அந்த மருத்துவமனை மூடப்படும் என ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் துறையூர், பச்சைமலை பகுதியில் சில தகவல்கள் வந்துள்ளதால் 20 பேர் கொண்ட குழு அங்கே தங்கியிருந்து முழுவதுமாக ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் கடந்த நான்கு மாதம் முன்பு 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பச்சை மலையில் உள்ள மூன்று கிராம மக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கிராம கண்காணிப்பு குழு மூலம் தகவல் கொடுக்கப்பட்டு அங்கு யாரும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

திருச்சி மாவட்டத்திலிருந்து ஆறு பேர் கொண்ட மருத்துவ குழு தடயவியல் சோதனைக்காக கள்ளக்குறிச்சி அனுப்பப்பட்டுள்ளதாக ஆட்சியர் குறிப்பிட்டார்.


Watch – YouTube Click

What do you think?

ஆட்சியை மாற்ற பிறந்தவரே என விஜய் பிறந்தநாளையொட்டி தவெகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு யார் காரணம் மதுரையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி