in

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

 

விருதுநகரில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணி மாவட்ட கண்காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வருடா வருடம் ஜூன் 26 ஆம் தேதி சர்வதேச போதை ஒழிப்பு தினம் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது ,அதனை யொட்டி இந்த சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை யொட்டி தமிழக அரசால் பள்ளி, கல்லூரி,  மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன

அதனை முன்னிட்டு இன்று சர்வதேச போதை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு விருதுநகர் உட்கோட்ட காவல்துறை மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களால் மது போதை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி நாடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பின்பு நடைபெற்ற சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சோமசுந்தரம், சூரியமூர்த்தி மற்றும் மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் பவித்ரா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்

இந்த பேரணியில் கலந்து கொண்ட 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள்,மதுவிற்கு எதிராக குரல் கொடுப்போம், மது என்னும் போதையில் செல்பவன் மரணத்தை நோக்கி பயணிப்பான், மனிதா உன் பாதையை வாழ்க்கையின் வெற்றிக்காக மாற்று, உண்மையை வளமாக்க மதுவை பிணமாக்கு,

பாதையை மாற்றவும் போதையை ஒழிப்போம், மரணத்தை ஏற்படுத்தும் மதுவை எம் வாழ்வில் இருந்து விலக்கி வைப்போம், குடும்பத்தை அழிக்கும் மது அரக்கனை ஒழிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 200 மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்

மேலும் இந்த பேரணியானது விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தொடங்கி அசன் ஹோட்டல், உழவர் சந்தை, மதுரை ரோடு சர்ச் மற்றும் முக்கிய வீதியின் வழியாக வந்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் ஒரு நிலைப்பள்ளியில் முடிவடைந்தது.

What do you think?

திமுக உடந்தையாக செயல்படுகிறது பாஜக பொதுக்குழு உறுப்பினர் தங்க.வரதராஜன் குற்றச்சாட்டு

தேர்தலில் போட்டியிட நிராகரித்ததால் திருச்சியில் முதியவர் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டம்