in

மயிலாடுதுறை அருகே கடத்தி வரப்பட்ட இரண்டு லட்சம் மதிப்பிலான 40 கிலோ கடல் அட்டையை பறிமுதல்


Watch – YouTube Click

மயிலாடுதுறை அருகே கடத்தி வரப்பட்ட இரண்டு லட்சம் மதிப்பிலான 40 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்த போலீஸ் மற்றும் வனத்துறையினர் கடத்தல் ஈடுபட்ட வரை கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நண்டலார் சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நாகப்பட்டினம் நம்பியார் நகர் துரைராஜ் மகன் மழலைமாறன்.38. என்பவர் தரங்கம்பாடி கடல் பகுதியில் பிடிக்கப்பட்ட ரூ 2 லட்சம் மதிப்பிலான 40 கிலோ கடல் அட்டையை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் மழலை மாறனை கைது செய்து அவரிடம் இருந்த கடல் அட்டையை பறிமுதல் செய்த சீர்காழி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து சீர்காழி வனத்துறையினர் மழலை மாறனை கைது செய்து அவரிடம் இருந்த கடல் அட்டையை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

மின்வாரிய நிரந்தர பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

Rishi Sunak எதிராக எதிரான கேன்வாஸரின் இனவெறி வார்த்தைகள் – Farage-ன் கருத்து