in

இன்றைய முக்கிய செய்திகள் | புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (29.06.2024)


Watch – YouTube Click

இன்றைய முக்கிய செய்திகள் | புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (29.06.2024)

 

புதுச்சேரியில் வீடு இல்லாமல் தவித்த நரிக்குறவ இன பெண்ணிற்கு வீடு கட்டிக் கொடுத்த சமூக ஆர்வலர்

புதுச்சேரியில் சேர்ந்தவர் அருண் இவர் கடற்கரை சாலையில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை சமூக சேவைகளுக்காக செலவிட்டு வருகிறார் இதன்படி வெயில் காலங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மோர் ரஸ்னா உள்ளிட்டவைகள் வழங்குவது மழைக்காலங்களில் ரெயின் கோட் வாங்கிக் கொடுப்பது மேலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு உடைகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக எழுது பொருட்கள் வாங்கிக் கொடுத்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக லாஸ்பேட்டை அருகே உள்ள நரிக்குறவர் காலணியில் வீடு இல்லாமல் நரிக்குறவன பெண் குடும்பத்துடன் தவித்து வந்தார்.

இதனை அறிந்த அவர் அவர்களின் இரண்டு மகன்களுக்கு படிப்பதற்கு உதவிகளை செய்து சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அவர்கள் தங்குவதற்கு வீடுகளையும் கட்டிக் கொடுத்தார்.

இன்று அந்த வீட்டை நரிக்குறவன பெண்ணிற்கு ஒப்படைப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது. இதனையொட்டி அந்த வீட்டை இன்று நரிக்குறவ இன பெண்ணின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து நரிக்குறவ இன பெண் கூறும்போது…

எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் தவித்த தங்களுக்கு வீடு கட்டி கொடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

 

 

 

புதுச்சேரியில் நண்பரின் கொலைக்கு பழிவாங்க ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலிசார் அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்

புதுச்சேரி நகர பகுதியில் உள்ள அரசு மார்பக புற்றுநோய் மருத்துவமனை பின்புறம் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக பெரிய கடை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார்,சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மறைந்திருந்த கும்பலை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

விசாரணையில், அரியாங்குப்பத்தை சேர்ந்த விஜி என்கிற ஆடு விஜி, கோவிந்த சாலையை சேர்ந்த செல்வம், முருங்கப்பாக்கத்தை சேர்ந்த தணிகைவேல், சக்திவேல்,நைனார்மண்டபத்தை சேர்ந்த ஜான் மற்றும் இளங்கோ நகரை சேர்ந்த பிரகாஷ் என்பதும் அவர்களது சக கூட்டாளியான பரத்தை கொலை செய்தவர்களை பழிவாங்கவும், வழக்கு செலவிற்காக தொழில் அதிபர்களை மிரட்டி வழிப்பறி செய்ய பதுங்கி இருந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கத்தி,வீச்சரிவால்,4 செல்போன்கள் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

யானாம்..மண்டல நிர்வாக அதிகாரி அலுவலகம் முன் மீன் விற்கும் நூதன போராட்டத்தை நடத்திய மீனவ பெண்கள்…

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் யானாம் பிராந்தியம் ஆந்திர மாநில காக்கிநாடா அருகே உள்ளது. இங்கு மீன்பிடி தான் முக்கிய தொழிலாக விளங்குகிறது.மீன்கள் விற்பதற்கு இந்திரா காந்தி நகராட்சி மீற் அங்காடி இயங்கி வருகிறது. இதனை மண்டல நிர்வாக அலுவலகம் சீரமைத்து வருகிறது.இங்குள்ள தரை அனைத்தும் மார்பிகள் கொண்டு மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் மீன் விற்க வரும் பெண்கள் தவறி விழுவதாக பொதுமக்கள் கீழே விழுந்து காயமடைவதாகவும் குற்றச்சாட்டி உடனடியாக மார்பில்சை மாற்றி வழுக்காத தரையை அமைக்க கோரி மீனவர் பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன் அங்காடியில் இருந்து அவர்கள் மண்டல நிர்வாக அதிகாரி அலுவலகம் மீன்களை வைத்து பெண்களை விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் போராட்டம் நீடித்த நிலையில் யானாம் நகராட்சி ஆணையர் கந்தவல்லி ராமகிருஷ்ணா அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது தரையை மாற்றித் தருவதாகவும் மீன் அங்காடியில் அடிப்படை வசதிகளை செய்து தருவதும் உறுதி அளிக்க போராட்டம் கைவிடப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணி தொடரும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (29.06.2024)