பாராளுமன்றத்தில் இந்து மக்களை அவமதித்து பேசிய ராகுல்காந்தியை கண்டித்து புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏ சட்டமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
பாராளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி உரையாற்றியபோது இந்துக்களை வன்முறையாளர்கள் என பேசியதற்கு அவையில் பிரதமர் மோடி, அமீத்ஷா உள்ளிட்ட பாஜகவினர் ராகுல்காந்தியை மன்னிப்பு கோர வலியுறுத்தினர். இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில்.
புதுச்சேரி பாஜக ஆதரவு எம்.எல்.ஏ அசோக்பாபு இந்துக்களை அவமதித்த ராகுல்காந்தியை கண்டித்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் தரையில் அமர்ந்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் பேரவை செயலர் பேச்சுவார்த்தை நடத்தினார் இருப்பினும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.இந்த நிலையில் சட்டமன்றத்திற்கு வந்த சபாநாயகர் செல்வம், பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அசோக் பாபு எம்எல்ஏ போராட்டத்தை கைவிட்டார்.பாஜக எம்எல்ஏவின் திடீர் போராட்டத்தால் சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.