லண்டனில் டோரிகள் அனைத்தும் அழிக்கப்படும் | All the Tories will be destroyed in London
லண்டனில் டோரிகள் – அனைத்தும் அழிக்கப்படும் வரும் 4ஆம் தேதி நடக்க இருக்கும் பொது தேர்தலில் கன்சர்வேடிவ்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
சவண்டாவில் நடந்த இறுதிக் கருத்துக்கணிப்பில், டோரிகளை விட லேபர் கட்சி 30 புள்ளிகள் முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது, தலைநகரில் 49 சதவீதம் மக்கள் லேபர் கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
கடந்த வார கருத்துகணிப்ல் இருந்து சர் கெய்ர் ஸ்டார்மரின் கட்சி ஆறு சதவீத குறைந்த பொழுதும் கன்சர்வேடிவ்வை விட முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சீர்திருத்த UK 11 சதவீதம் உயர்ந்தும், லிபரல் டெமாக்ராட்ஸ் 10 சதவீதமும், பசுமைவாதிகள் 6 சதவீதமும் மற்ற கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஐந்து சதவீதத்திலும் உள்ளனர். தலைநகரில் டோரிகள் 20 இடங்களைக் கொண்டுள்ளனர்
சவண்டாவின் அரசியல் ஆராய்ச்சி இயக்குனர் கிறிஸ் ஹாப்கின்ஸ் கூறுகையில், “எங்களின் முடிவுகள் தேர்தலில் பிரதிபலித்தால், லண்டனில் இருந்து கன்சர்வேடிவ்கள் அனைவரும் அழிக்கப்படலாம் தெரிகிறது என்றார்.
தலைநகரில் கன்சர்வேடிவ் கட்சி மிகவும் பலவீனமாக உள்ளதால் தங்களது மறைமுக ஆதரவை சீர்திருத்த UK க்கு அளித்து வருகிறது.
சவண்டாவின் அரசியல் ஆராய்ச்சியின் படி லண்டன் வாழ் மக்களின் முக்கிய பிரச்சனையான வீட்டுவசதி முதல் பொருளாதாரம் வரை லண்டன் மேயரும், தேசிய அரசாங்கமும் இனைந்து செயல்படும் கட்சிக்கே லண்டன் வாழ் மக்களின் அதரவு இருக்கும்.
கடந்த மே மாதம், நடந்த லண்டன் மேயர் போட்டியில் தேசிய அளவில் டோரி கட்சியை விட சூசன் ஹால் சிறப்பாக முன்னிலையில் தான் இருந்தது. ஆனால் லேபர் மேயரான சாதிக் கான், மூன்றாவது முறையும் வென்று பதவியேற்றதால் மற்றவர்கள் தோல்வியடைந்தனர்.
தனது சமூகத்தில் உள்ளவர்களிடமிருந்து வந்த மிகையான ஆதரவினை தொடர்ந்து தனது முன்னாள் கட்சிக்கு எதிராக நிற்கும் முடிவை எடுத்ததாக Ms.ஷாஹீன் கூறியுள்ளார்.