சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன உத்சவம்: கொடியேற்றம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன உத்சவம்: கொடியேற்றம் விழா துவங்கம்
சிதம்பரம், பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் இன்று ஆனித்திருமஞ்சன தரிசன உத்சவம் தற்போது தொடங்குவதால் இன்று புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
நடராஜர் கோயிலில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் புதன்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
உற்சவ ஆச்சாரியார் சிவ..கு.த.கு.கிருஷ்ணமசாமி தீட்சிதர் கொடியேற்றி உற்சவத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறுகிறது.
உத்சவ விபரம் வருமாறு: ஜூவை 4-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 5-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 6-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 7-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 8-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 9-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 10-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.
ஜூலை 11ம் தேதி வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை 12-ம் தேதி வெள்ளிகிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
ஜூன்.13-ம் தேதி சனிக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் உ.வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலாளர் து.ந.சுந்தரதாண்டவ தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.