in

தஞ்சையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற போது பேட்டி

Watch – YouTube Click

காவிரி பிரச்னையில் மத்திய அரசு எந்த முன்னெடுப்புகளையும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை.

தஞ்சையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற போது பேட்டி.

எடப்பாடி பழனிசாமியுடன் ரகசியமாக பேசியது குறித்து தற்போது அண்ணாமலை பேசி வருகிறார். அரசியல் கட்சிகள் இடையே ரகசியமாக கூட்டணி குறித்து பேசியதை தன்னுடைய தோழமைக் கட்சியைக் காட்டிக் கொடுப்பதும், அதன் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி பேசுவதும் தலைமைப்பண்புக்கு அழகல்ல. இதுதான் பாஜகவின் தலைமைப்பண்பு.

உருது மொழியைத் திணிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது, மிக மலிவான அரசியல். சமூகத்துக்கு எதிராக விஷமத்தனத்தை விதைப்பதற்கு தயாராகியுள்ளார். இதையும் தமிழ்நாட்டு மக்கள் முறியடிப்பர்.

உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி, காவிரியில் தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என மத்திய அரசு அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொள்ள வேண்டும். ஆனால், இந்த பிரச்னையில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. மாநிலங்களுக்கு இடையே அரசியல் செய்வது, ஒரு சாரார் பக்கம் நிற்பது போன்ற வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

திமுக – காங்கிரஸ் இடையேயான உறவு உண்மையானது; கண்ணியமானது. மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள இக்கூட்டணி இன்னும் பல தேர்தல்களில் வெற்றி பெறப் போகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றார்

 

Watch – YouTube Click

What do you think?

இன்றைய முக்கிய செய்திகள் | தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (05.07.2024)

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்