இன்றைய முக்கிய செய்திகள் | புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (06.07.2024)
புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் ரங்கசாமி மீது பாஜகவினர் கூறிய ஊழல் குற்றச்சாட்டால் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது நாராயணசாமி என நாரயாணசாமி தெரிவித்துள்ளார்
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி எந்தவித பதிலும் சொல்லாமல் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் என்றவர் தற்போது புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது என்றவர் புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏக்கள் அக்கட்சி தலைவருடன் ரகசியக்கூட்டம் நடத்தி பாஜக அமைச்சர்களை மாற்ற வேண்டும், முதலமைச்சர் ரங்கசாமி தங்களை கலந்தாலோசிக்காமல் செயல்படுகின்றார், ஊழல் ஆட்சி நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டி அதன்பின் ஆளுநரையும் சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.
இதன்பின்பு டில்லி சென்ற பாஜக எம்.எல்.ஏக்கள் தங்களது கட்சி தலைவர்களிடம் அளித்த புகாரில் பாராளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கு முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியிம் நிர்வாக சீர்கேடுதான் காரணம் என்றும் அதனால் கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டும் என தெரிவித்துள்ளார்கள். ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் ரெஸ்டோபார் உரிமம் வழங்குவதிலும் ஊழல், மாட்டு தீவனம் வாங்குவதில் ஊழல், குப்பை அள்ளும் டெண்டரில் ஊழல் என இப்படி ஊழல் மலிந்த ஆட்சியாக உள்ளது என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே குற்றஞ்சாட்டியுள்ளது. இதை பாஜகவினர் ஏற்றுக்கொண்டு அக்கட்சி தலைமையிடம் புகார் கூறியுள்ளார்கள் இதன் மூலம் காங்கிரஸ் கூறிய புகார்கள் ஊர்ஜிதம் ஆகியுள்ளது என்றவர்
இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை பாஜக எம்.எல்.ஏக்கள் புகார் கூறியது அவர்களது உட்கட்சி விவகாரம் ஆனால் அவர்கள் கூறிய ஊழல்புகாருக்கு முதலமைச்சர் ரங்கசாமி என்ன பதில் சொல்ல போகின்றார்கள். ஊழலை முதலமைச்சரும் அமைச்சரும் மூடிமறைக்க பார்க்கின்றார்கள். மேலும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமாராயணன் வீடு ரூ.2 கோடி செலவு செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. அரசு சொத்தை கொள்ளை அடிக்கும் வேலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் ஈடுபட்டுள்ளராத குற்றஞ்சாட்டிய நாராயணசாமி, முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி மீது பாஜக எம்.எல்.ஏக்கள் கூறிய குற்றச்சாட்டுகள் 100க்கும் 100 உண்மை என்றும் இதனால் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக ஆட்சி ஆட்டம் கண்டுள்ளதாகவும் இந்த ஆட்சியின் காலம் எண்ணப்பட்டு வருகின்றதாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் முதல் முறையாக சேவல் சண்டை போட்டி. 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 3-ஆயிரம் சேவல்களுடன் போட்டியாளர்கள் பங்கேற்பு
பொங்கல் விழாவில் வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என விழா குழு அரசுக்கு கோரிக்கை.
பொங்கல் பண்டிகையின்போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, கிடா, சேவல் சண்டைகள் தமிழகத்தில் நடைபெறும்.
இதேபோல புதுச்சேரியிலும் சேவல் சண்டைகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் சேவல்கள் துன்புறுத்தப்பட்டு வந்தததாகவும், சூதாட்டத்தில் ஈடுபடுவதால் சட்ட ஒழங்கு சீர்கெடுவதாகவும் புகார் எழுந்தது.
இதனால் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தேங்காய்திட்டை சேர்ந்த ஒருவர்,சேவல் சண்டை நடத்த கோர்ட்டில் அனுமதி கேட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சில நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த கோர்ட் அனுமதி வழங்கியது. இதன்பேரில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் கனரக வாகன முனையத்தில் சேவல்சண்டை இன்றும், நாளையும் நடக்கிறது.
60 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்த வெற்றுக்கால் சேவல் சண்டை விழா இன்று தொடங்கியது.
இதற்காக கனரக வாகன முனையத்தில் 50க்கும் மேற்பட்ட களம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் புதுவை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,ஒடிசா, உட்பட 10 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றது.
இந்த சேவல்களை வளர்ப்பவர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதனால் புதுச்சேரியில் சேவல் சண்டை களைகட்டி நடந்தது. நாளையும் சேவல் சண்டை நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
சேவல் சண்டை ஏற்பாட்டாளர் சின்னதம்பி கூறும்போது,
புதுவை அரசு வெற்றுக்கால் சேவல் சண்டைக்கு அனுமதி அளித்துள்ளது. முதலமைச்சர், அமைச்சர்களுக்கு இதற்காக நன்றி தெரிவிக்கிறோம். இந்த சேவல் சண்டையை பொங்கல் பண்டிகையின்போது நடத்த அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
பேட்டி….சின்னத்தம்பி. விழா ஏற்பாட்டாளர்..
2,வீரமணி, போட்டியாளர் மதுரை.
3.பிரேம் சென்னை.
4.கலாநிதி,போட்டியாளர்
விருத்தாசலம்.
புதுச்சேரியில் பரபரப்பு ஏற்படுத்திய பாம் ரவி, அவரது நண்பர் கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. சந்தேகத்துக்கு இடமின்றி குற்றங்களை நிரூபிக்க தவறியதால், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாகக்கூறி தீர்ப்பளித்தார்.
புதுச்சேரி தாவீதுபேட் நகராட்சி குடியிருப்பை சேர்ந்தவர் ரவுடி பாம் ரவி(33). இவர் மீது 6 கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் இருந்தது. ஜாமீனில் வெளியே வந்த ரவி, வாணரப்பேட்டையை சேர்ந்த பரிடா அந்தோணி ஸ்டீபன்(28) என்ற நண்பருடன் 2021 அக்டோபர் 24ம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அவர்களை வாணரப்பேட்டை ஆலன்வீதி, ராஜராஜன் வீதி சந்திப்பில் வழிமறித்த கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியது. அதில் தப்பித்த 2 பேரையும் கத்தியால் வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக ரவுடி வினோத், தீன், மர்டர் மணிகண்டன், தியாகு, பிரேம், ராஜா, தேவேந்திரன், அருண், பிரவீன், ரோமாக், ஆட்டோ மணி உட்பட 31 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது.
இந்த இரட்டை கொலை வழக்கு விசாரணை புதுவை 3வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசேகரன், சந்தேகத்துக்கு இடமின்றி குற்றங்களை நிரூபிக்க தவறியதால், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாகக்கூறி தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகளில் பிரேம் என்பவர் ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்ததால் அவருக்கு மட்டும் ஏழு வருட சிறை தண்டனை அளித்து தலைமை நீதிபதி சந்திரசேகர் உத்தரவிட்டார்.
பேட்டி; பிரேம்குமார், குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்
இறந்தவர்கள் புகைப்படம் உள்ளது