இன்றைய முக்கிய செய்திகள் | புதுவையின் அன்றாட நிகழ்வுகளின் அத்தியாயம் (08.07.2024)
செல்போன் ஆப் ஒன்றின் மூலம் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் பண மோசடி செய்த சென்னை நபரை, புதுச்சேரி சைபர் க்ரைம் போலீ ஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி பாகூரைச் சோ்ந்தவா் அஸ்வின். இவா், கோயில் திருவிழாவுக்காக தவில் மற்றும் நாதஸ்வரத்தை இணையதளத்தில் தேடினாராம். அப்போது, குறிப்பிட்ட செயலியில் தவில் மேளம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்டவருக்கு தவில், மேளத்துக்காக ரூ.22, 000 முன்பணமாக இணைய வழியில் அஸ்வின் அனுப்பினாா்.
இந்த நிலையில், குறிப்பிட்ட தேதியில் நாதஸ்வரம், மேளம் அனுப்பவில்லையாம். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸில் புகாரளித்தாா். விசாரணையில், சென்னை கொரட்டூரைச் சோ்ந்த ஜெயக்குமாா் (52) மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை இணையவழிக் குற்றப்பிரிவு ஆய்வாளா்கள் தியாகராஜன்,கீா்த்தி ஆகியோா் கைது செய்தனா். கைதான ஜெயக்குமாா், மேலும் 7 பேரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. தொடா்ந்து, அவரிடமிருந்த 30-க்கும் மேற்பட்ட வங்கி புத்தகங்கள், காசோலைகள், 20 கைப்பேசி சிம் காா்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மக்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய, குற்றவியல் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நீக்க கோரியும், அதில் இந்தி திணிப்பை கைவிட கோரி புதுச்சேரி மாநில அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புதுச்சேரி நீதிமன்றம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய, குற்றவியல் சட்டங்களில் உள்ள குளறுபடிகளை நீக்க கோரியும், புதிய குற்றவியல் திருத்தச் சட்டத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்தும், அச்சட்டங்களுக்கு மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் சூட்ட கோரியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணையின்படி புதுச்சேரி அதிமுக மாநில வழக்கறிஞர் பிரிவு சார்பில் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பரகன், இந்த மூன்று குற்றவில் சட்டங்களை இந்தியிலும், சமஸ்கிருதத்திலும் பெயர் வைத்ததின் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மத்திய அரசு அவமதித்து அப்பட்டமாக மீறி உள்ளதாகவும், இது மத்திய அரசின் சட்ட விரோத சர்வாதிகாரத் தனமான செயலாகும் என்றார். மேலும் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் அரிதி பெரும்பான்மை வழங்கவில்லை என்றும், கூட்டணி கட்சிகளின் துணையோடு மைனாரிட்டி ஆட்சி அமைத்துள்ள பாஜக வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு ஜூலை 1-ம் தேதியிலிருந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மூன்று குற்றவியல் புதிய சட்டங்களை அவசர கோலத்தில் அமல்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இந்த சட்டத்தால் பேச்சுரிமை பறிக்கப்படுவதாகவும், இந்த சட்டங்களில் திருத்தம் செய்யவில்லை என்றால் அடுத்தகட்டமாக தலைமை அனுமதி பெற்று அனைத்து வழக்கறிஞர்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை ஆராய்ந்து தவறுகளை சரி செய்வோம்.என்.ஆர்.காங்-பாஜக கூட்டணி தொடரும்.2026 ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அடுத்த ஆண்டுகளிலும் கூட்டணி தொடரும்.மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா பேட்டி.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவு கூட்டணி குழப்பத்திற்கு காரணமாகி விட்டது. காங்கிரசிடம் ஆளுங்கட்சியான பாஜக தோற்றதையடுத்து கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முதல் அமைச்சர் ரங்கசாமி மற்றும் பாஜ அமைச்சர்களுக்கு எதிராக பதவியில் இல்லாத பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள்,நியமன எம்எல்ஏக்கள் என 9 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அதில் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் முதல் அமைச்சர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார். கூட்டணி தர்மத்தை முதல் அமைச்சர் மீறி விட்டதால் கூட்டணியை விட்டு வெளியே டெல்லி சென்று தேசிய தலைவர் நட்டாவிடம் வலியுறுத்தினார்கள்..
இந்தநிலையில் புதுச்சேரி பாஜக பொறுப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் சுரானா மீண்டும் நியமிக்கப்பட்டார்.
அவர் எம்எல்ஏக்கள் புகார், கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் தேர்தல் தோல்வி குறித்தும் பாஜக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பாஜகவினருடன் மேலிட பொறுப்பாளர் சுரானா தனித்தனியாக பேசி பேசினார்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்,பாஜக தலைவர் செல்வகணபதி,சபாநாயகர் செல்வம், ஆகியோருடன் தனித்தனியாக பேசினார்.அடுத்து பாஜக எம்எல்ஏக்கள் ராமலிங்கம்,அசோக் பாபு ஆகியோருடன் பேசினார். நண்பகல் 12 மணி வரை அதிருப்தி பாஜக எம்எல்ஏக்கள் வரவில்லை.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுரானா,பாஜக மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம்.அனைத்து தொகுதிகளிலும் நல்ல வாக்குகள் பெற்றுள்ளோம்.அடுத்த 2 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டும் என மக்கள் கூறியுள்ளனர்.வரும் காலங்களில் கடினமாக உழைப்போம்.தவறுகளை சரி செய்வோம் என கூறினார்.
புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளுக்கும் பாஜக சின்னம் புதிது.அடுத்து வரும் தேர்தல்களில் கூடுதலாக வெற்றி பெறுவோம் என கூறினார், பாஜக தேசிய தலைவரிடம் பாஜக எம்எல்ஏக்கள் புகார் கூறியதாக தெரியவில்லை.
மாநில அரசு செயல்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என தான் கூறியுள்ளனர்.புதுச்சேரி வளர்ச்சிக்கு மத்திய அரசு கூடுதலாக ஒத்துழைக்க வேண்டும் என தான் கூறியுள்ளனர் என்றார்.
பாஜக-என்.ஆர்.காங் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. 2026 தேர்தலுக்கு பிறகு அடுத்தும் தொடரும் என கூறினார், அருப்தி எம்ஏல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.மதியம் 2 மணிக்கு முதல்வர் ரங்கசாமியை சந்திக்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.