கரூர் அருகே உள்ள ஆங்கில மேல்நிலைப்பள்ளியில், முதலாவது ஆண்டாக மாணவர்களுக்கான லோக்சபா தேர்தல் நடந்தது.
கரூர் லிட்டில் பள்ளியில், மாணவர்களின் தலைமைப் பண்புகளை வளர்க்கும் வகையில், மாதிரி லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டு, பல்வேறு பொறுப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, ஆறாம் ஆண்டாக நடந்த தேர்தலில், மூன்றாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை பயிலும் மாணவர்கள் ஓட்டளித்தனர். தாமரை, மீன், வாத்து, ஆப்பிள் சின்னங்களை கொண்ட அணியினர் போட்டியிட்டனர்.
ஆப்பிள் அணி 393 ஓட்டு பெற்று வெற்றி பெற்றனர். தாமரை அணி 232 ஓட்டு, மீன் அணி 125 ஓட்டு, வாத்து அணி 71 ஓட்டு பெற்றனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்புத்தலைவர்கள் ஓட்டளித்து லோக்சபா உறுப்பினர்களை தேர்வு செய்தனர். சபாநாயகர், பிரதமர் உள்பட பல்வேறு துறை அமைச்சர்களாக 13 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று பதவி பிரமான நிகழ்ச்சி நடக்கிறது.