கரூர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்வு.
கரூர் பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற 10.07.2024 புதன்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் காலை 05.15 மணி மேல் 07.15 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால் அதனை முன்னிட்டு இன்று கொடுமுடி ஆற்றில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க வெங்கமேடு காமாட்சி அம்மன் ஆலயத்திலிருந்து வண்ண உடை அணிந்து ஊர்வலமாக முக்கிய வீதியில் வழியாக கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அன்ன காமாட்சி அம்மன் ஆலயம் வந்தடைந்தனர்.
அதை தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் இன்று இரவு 06.30 மணி அளவில் ஆலய வாசலில் அன்ன காமாட்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் காலயாக வேள்வி நடைபெற உள்ளது .
அதை தொடர்ந்து யாக கலசத்திற்கு மகா தீபாராதனை காட்டப்பட உள்ளது.