in

நீடாமங்கலம் பேரூராட்சி நிதியினை தவறாக கையாள மறுத்த பெண் ஊழியர் பணிநீக்கம்

நீடாமங்கலம் பேரூராட்சி நிதியினை தவறாக கையாள மறுத்த பெண் ஊழியர் பணிநீக்கம்: செருப்பால் அடிக்க முற்பட்ட நீடாமங்கலம் பேரூராட்சி திமுக நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை இழந்த பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு…

தமிழகம் முழுவதும் பேரூராட்சி அலுவலகங்களில் 450க்கும் மேற்பட் கணினி ஆப்ரேட்டர்கள் தற்காலிக ஊழியர்களாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். இந்த வகையில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் 21 ஆண்டுகாலமாக கணினி ஆப்பரேட்டராக தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் சாந்தி. கணவரை பிரிந்த இவர் 10 வயது நிரம்பிய ஒரே பெண் குழந்தையுடன் நீடாமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார்.
தான் வறுமை நிலையில் இருந்தாலும் கடந்த 20 ஆண்டுகாலமாக நேர்மையாக அரசின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு பணியாற்றி வந்த நிலையில் அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர் சாந்தி.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நீடாமங்கலம் பேரூராட்சி தலைவராக ராமராஜ் தேர்வு பெற்றார்.

இவர் நீடாமங்கலம் திமுக நகர செயலாளர் ராஜசேகர் என்பவரது மகன். மேலும் நீடாமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவராக இருந்துவருபவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகி ராபர்ட் பிரைஸ் என்பவரது மனைவி ஆனந்தமேரி. ஆனந்தமேரி பெயளரவிற்கு மட்டுமே துணைத்தலைவராக இருந்துவரும் நிலையில் நீடாமங்கலம் பேரூராட்சி நிர்வாகத்தின் அனைத்து அலுவல்களிலும் ராபர்ட் பிரைஸ் தலையீடு தலைவிரித்தாடி வருவதாக அலுவலகத்தில் பணியாற்றிவரும் ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

குறிப்பாக நீடாமங்கலம் பேரூராட்சியின் தலைவர், மற்றும் துணைத்தலைவர் இருவரும் கூட்டாக சேர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட புறம்போக்கு நிலங்களை ஆட்டைபோடுவது, வீடு மற்றும் கடைகளுக்கு விரி விதிப்பில் முறைகேடு செய்வது, பேரூராட்சி நிதியில் சுகாதார மேம்பாடு சம்மந்தமாக பொருட்களை வாங்குவதில் முறைகேடு செய்தல், சாலை அமைத்தலில் முறைகேடு போன்ற பல்வேறு நிலைகளில் அங்கு பணியாற்றும் ஊழியர்களை மிரட்டி தங்களுக்கு சாதகமாக செயல்படவைத்து கையெழுத்து வாங்குவதும், இல்லாவிட்டால் மிரட்டி அடிபணிய செய்வதும் தொடர்கதையாக இருந்துவருகிறது.
இந்நிலையில் நீடாமங்கலம் பேரூராட்சியில் கடந்த 21 ஆண்டுகாலமாக சிறப்பாக பணியாற்றிவந்த சாந்தி என்ற கணினி ஆப்பரேட்டரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் நீடாமங்கலம் பேரூராட்சியின் துணைத்தலைவரின் கணவர் ராபர்ட் பிரைஸ்(சிபிஎம்) பேராட்சியின் தலைவரது அறைக்கு அழைத்து நாங்கள் சொல்வதை கேட்க மாட்டியா என ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசி செருப்பால் அடிக்க முற்பட்டுள்ளார்.

இதுகுறித்து நீடாமங்கலம் பேரூராட்சி செயல் அலுவரிடம் முறையிட்ட சாந்தி, நீடாமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுசம்மந்தமாக் நீடாமங்கலம் பேரூராட்சியின் துணைத்தலைவரின் கணவர் ராபர்ட்பிரைஸ் சாந்தியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சாந்தி காவல்துறையிடம் புகார் அளித்தமைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக நீடாமங்கலம் பேரூராட்சி தலைவர் ராமராஜ் கடந்த மார்ச் மாதம் சாந்தியை நிரந்தரமாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதுசம்மந்தமாக சாந்தி மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீயை கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்து புகார் அளித்த நிலையில் ஆட்சியர் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் வருமாறு கூறி அனுப்பியுள்ளார். மேலும் திமுகவினரால் வேலையை இழந்த சாந்தி சம்மந்தப்பட்ட தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டிஆர்பி. ராஜாவை நேரில் சந்தித்து தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 4 மாதகாலமாக வருமானத்தை இழந்து தனது 10 வயது பெண் குழந்தையுடன் பரிதாவித்துவரும் சாந்தி இனி குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்னை பாட்டிலுடன் ஆட்சியை சந்திக்க வந்தார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரமாக அழுதுகொண்டே நின்ற சாந்தி, மண்ணெண்னை பாட்டிலை எடுத்து தன்மீது ஊற்ற முற்பட்டபோது அங்கிருந்த காவல்துறை அதனை தட்டிபிடிங்கி சென்றனர்.

கணவரை பிரிந்து தனித்து வாழ்ந்து வரும் பெண்ணிடம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் நீடாமங்கலம் பேரூராட்சியின் தலைவர் மற்றும் துணைத்தலைவர்களது அராஜகத்தை கண்டித்து தனது குழந்தையுடன் பாதிக்கப்பட்ட சாந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

What do you think?

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை….

நாமக்கல் மோகனுார் பெருமாள் ஆலயத்தில் ஆனிமாத பிரம்மோட்ஷச தேர்திருவிழா – 5-ம் நாள் ஷேசவாகனத்தில் திருவீதி உலா