in

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை….

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை….

 

கணக்கில் வராதu 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்ததுடன் ஜி.பே, போன் பே உள்ளிட்டவற்றில் தீவிர சோதனை….

திருவண்ணாமலை நகரில் உள்ள வேட்டவலம் சாலையில் தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வீடு, நிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த அலுவலகத்தில் அனுதினமும் சுமார் 50 க்கும் மேற்பட்ட பத்திர பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில் இங்கு நடைபெறும் பண பரிவர்த்தனைக்காக ஜி.பே மற்றும் போன் பே மூலம் கையூட்டு பெற்றுக் கொண்டு பத்திர பதிவு செய்யப்படுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடியாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கணக்கில் வராத 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததுடன் அலுவலகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரின் ஜி.பே மற்றும் போன் பே ஆகியவற்றை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த டிஜிட்டல் இணையதள பண பரிவர்த்தனை மூலம் பல லட்சக்கணக்கான பணங்கள் கணக்கில் வராமல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றாமல் இடைத்தரகராக செயல்படும் குமார் என்ற நபர் அலுவலகத்தில் அமர்ந்து இருந்த நிலையில் அவரை விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது கைபேசியை வாங்கி சோதனை செய்யும் போது பல நபர்களுக்கு ஜி.பே மற்றும் போன் பே மூலம் பணப் பரிவர்த்தனை நடைபெற்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அனைவரின் செல்போன்களை வாங்கி லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் மனை வரன்முறை படுத்தப்படாத மனைகள் லஞ்சம் பெற்று அதிகமாக பதிவு செய்வதாக வந்த புகாரியின் அடிப்படையில் இன்று இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இச்சம்பவம் திருவண்ணாமலை நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து

பிரச்சனை விஸ்வருபம் எடுத்த நிலையில் samantha விஜய் 69 படத்தில் இருந்து நீக்கப்பட்டார்