in

புதுச்சேரியில் முதல் முறையாக PPL T20 கிரிக்கெட் போட்டி

புதுச்சேரியில் முதல் முறையாக PPL T20 கிரிக்கெட் போட்டி

 

புதுச்சேரியில் முதல் முறையாக PPL T20 கிரிக்கெட் போட்டி
ஆகஸ்ட் 5 முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது

இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களை 3 லட்சம் முதல் 12 லட்சம் வரை ஏலம் எடுக்கப்பட்டனர்.

புதுச்சேரியில் முதல் முறையாக புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேசன் மற்றும் PPL (பாண்டிச்சேரி பிரீமியர் லீக்) இணைந்து நடத்தும் T20 கிரிக்கெட் போட்டி ஜூலை 5-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை புதுச்சேரி சீக்கெம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தT20 கிரிக்கெட் போட்டியில் காரைக்கால் வாரியர், ஏனாம் ராயல்ஸ், மாஹே மகேலோ ஸ்ட்ரைக்கர்ஸ், ட்ராப்தவுட் ஒயிட் டவுன் ஜெயின்ஸ், வில்லியனூர் மோகித் கிங்ஸ், ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ், என 6 அணிகளை சேர்ந்த 120 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

டி 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களை ஏலத்தின் மூலம் தேர்வு செய்யும் நிகழ்வு புதுச்சேரி சீகெம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இது ஆறு அணிகள் பங்கேற்று ஏலத்தின் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒவ்வொரு வீரரும் குறைந்தபட்சம் 3 லட்சம் முதல் அதிகபட்சமாக 12 லட்சம் வரை ஏலம் எடுக்கப்பட்டனர்.

இது குறித்து புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் கூறும்போது…

புதுச்சேரியில் முதல்முறையாக கிரிக்கெட் டி 20 கிரிக்கெட் போட்டி பரிசு தொகை இல்லா கிரிக்கெட் போட்டியாக நடைபெறுகிறது. வெற்றி பெறும் அணிக்கு கோப்பைகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

மேலும் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இந்த போட்டி முதல் முறையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடி ஒளிபரப்பு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

புதுச்சேரியில் 23 ஐம்பொன் சிலை திருட்டு 4 குற்றவாளிகள் கைது

இன்றைய UK தலைப்புச் செய்திகள்