நாடாளுமன்ற துணைச் செயலாளரானார் எம்.பி., எம்மா ஹார்டி
எம்.பி., எம்மா ஹார்டி சுற்றுச்சூழல் உணவு மற்றும் ஊரக விவகாரங்கள் துறையின் (டெஃப்ரா) நாடாளுமன்ற துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹல் வெஸ்ட் மற்றும் ஹால்டெம்ப்ரைஸ் தொகுதியில் தொழிற்கட்சி சார்பாக போட்டி இட்டு17,875 வாக்குகளை பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.
ஊடகங்களில் தனது புதிய பங்கைப் பற்றி பதிவிட்ட திருமதி ஹார்டி, இந்த பதவி கிடைத்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி “இங்கிலாந்து முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு மாற்றங்களைச் செய்யத் தயாராக இருக்கும் தொழிற்கட்சி அரசாங்கத்தின் இதயத் துடிப்புடன் செர்ந்திருபதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று ஹார்டி கூறினார்.
முன்னர் கல்வி மற்றும் பல்கலைக்கழக அமைச்சராக பணியாற்றிய திருமதி ஹார்டி, கடந்த வாரம், அவர் 17,875 வாக்குகளைப் பெற்று ஹல் வெஸ்ட் மற்றும் ஹால்டெம்ப்ரைஸ் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். “இந்த தேர்தல் மாற்றத்திற்கானது,” என்று அவர் கூறினார்.