ரோபோ துணையுடன் படிக்கும் புற்றுநோயால் பாதித்த லண்டன் மாணவன்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தென்மேற்கு லண்டன் மாணவர் ஒரு ரோபோ மூலம் பள்ளிப் பாடங்களைத் தொடருக்கிறார். ஹோவர்..டுக்கு அரிதான வகை கை புற்றுநோயைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, தீவிர கீமோதெரபியைத் தொடங்கிய பிறகு, ஹோவர்டின் பள்ளி வருகை 50% க்கும் கீழே குறைந்தது.
அதன் பின்னர், ட்விக்கன்ஹாமில் உள்ள பள்ளியில் படிக்கும் அந்த 12 வயது சிறுவனுக்கு ‘AV ஹோவர்ட்’ மற்றும் ஆடியோ விஷுவல் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் அவர் வீட்டிளோ அல்லது மருத்துவமனையில் இருந்து கொண்டே பாடங்களில் கலந்து கொள்ள முடிந்தது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் AV ஹோவர்டை பாடங்களில் ஒருங்கிணைக்க “ரோபோ பயிற்சி” பெற்று வருகின்றனர்.
“ஏ.வி. ஹோவர்டைக் கொண்டிருப்பது என்னைப் போன்ற ஒருவருக்கு அவர்களின் பள்ளி டோடு இணைந்திருக்கும் பாக்கியத்தை கொடுகிறது என்றார் மானவர் ஹோவர்ட். ஏவி ஹோவர்டின் கேமரா புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்களைப் படிக்க அனுமதிக்கிறது, மேலும் அவர் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர் மூலம் வகுப்பில் பேசவும்’ முடியும்.
இது குறித்து தலைமையாசிரியர் மார்ட்டின் ஓ’ சுல்லிவன் கூறியதாவது: மருத்துவ சிகிச்சையில் இருக்கும் ஒரு மாணவர், தொடர்ந்து பள்ளியில் இல்லை என்றால் படிப்பதில் பின்தங்குவது மட்டுமல்ல அவர்களின் நல்வாழ்வுக்கும் மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
“பல்வேறு காரணங்களுக்காக கல்வியை அணுக முடியாத மாணவர்களுக்கு, ரோபோவே எதிர்காலமாக இருக்கும்.”
இந்த ரோபோவை சார்ட்வெல் சில்ட்ரன்ஸ் கேன்சர் டிரஸ்ட்டில் இருந்து மொமெண்டம் என்ற தொண்டு நிறுவனத்தால் அறிமுகபடுத்தபட்டது.