in

காணாமல் போன சாலையை 5 மாதமாக வீட்டுவாசலில் நின்றபடி தேடும் குடியிருப்புவாசிகள்


Watch – YouTube Click

காணாமல் போன சாலையை 5 மாதமாக வீட்டுவாசலில் நின்றபடி தேடும் குடியிருப்புவாசிகள்

 

பைக் கார்லாம் போகாது நடந்து போனா தடுக்கி கீழே தான் விழனும் – ரோடுரோலர் மற்றும் JCB மட்டுமே செல்லும் வகையில் 13 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலை – பொதுமக்கள் ஷாக்

காணாமல் போன சாலையை 5 மாதமாக வீட்டுவாசலில் நின்றபடி தேடும் குடியிருப்புவாசிகள்- ஒரு தெருவிற்கு மட்டும் மழையை காரணம் காட்டும் அலட்சிய அதிகாரிகள்.

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொதும்பு கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நகரத்தை ஒட்டிய ஊராட்சிகளில் உட்கட்டமைப்பு மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைகளுக்கான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை பணிகள் முடிவடைந்துள்ளன. அதற்கான அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அதே பொதும்பு ஊராட்சியில் உள்ள அகல்யா வீதி என்ற பகுதியில் 13.5லட்சம் மதிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சாலைகள் அமைப்பதற்கான ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன. அதோடு அவ்வளவுதான் தற்போதுவரை 5 மாதம் கடந்த நிலையிலும் தார் ஊற்றி சாலையை அமைக்காமல் அப்படியே விட்டுசென்றுள்ளனர்.

ஆனால் அந்த சாலை அமைக்கப்பட்டதற்கான பணிகள் தொடங்கியதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு அதில் மதிப்பீடு அதிகாரிகள்பெயர் தொடர்பு எண்ணுடன் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் போர்டெல்லாம் பளபளவென இருக்க சாலையோ கொட்டிய ஜல்லி கற்களெல்லாம் நொறுங்கி மணலாய் மாறிவிட்டது.

கற்கள் கொட்டி 5 மாதம் ஆன நிலையில் இந்த சாலையில் கார், பைக், ஆட்டோக்கள், பால் வண்டி உள்ளிட்ட எந்த வாகனம் வந்தாலும் பஞ்சர் ஆகிவிடும் என்ற நிலை உள்ளதால் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் ஜல்லிக்கற்களில் நடந்துசெல்லும் போது முதியவர்களும், குழந்தைகளும் கீழே சறுக்கிவிழும் விபத்துகளும் அடிக்கடி நடந்துவருகிறது.

13.5 லட்சம் மதிப்பில் போடப்பட்ட இந்த சாலையில் ரோடு ரோலர்களும், ஜேசிபிகளும் மட்டும் செல்லும் நிலை உள்ளது. இதனால் அதிகாரிகள் போட்டதாக சொல்லப்படும் சாலையை காணாமல் போன நிலையில் எப்போது எங்களது சாலையை கண்டுபிடிப்போம் என 5 மாதமாக அவ்வப்போது சாலைக்கு வந்து எட்டி எட்டி பார்த்து ஏமாற்றத்துடன் நிற்கின்றனர் குடியிருப்புவாசிகள்.

பிப்ரவரி மாதம் போட்ட ரோட்ட காணாமேனு அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டால் நாளை நாளை என காரணம் கூறியே 5 மாதம் கடத்திவிட்டனர் எனவும், இதன் உச்சக்கட்டமாக பெய்யாத மழையை காரணம் காட்டி சாலை போட முடியவில்லை என அதிகாரிகளுக்குள்ளேயே காரணம் சொல்லமுடியாமல் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பொதும்பு ஊராட்சியில் பிப்ரவரி மாதத்தில் அதே தேதியில் தொடங்கிய சாலைபணிகள் எல்லாம் முடிவடைந்த நிலையில் அகல்யா வீதிக்கு மட்டும் மழை எப்படி பெய்கிறது என அதிகாரிகளின் விளக்கமே அப்பகுதி மக்களை வியக்க வைத்துவிடுகிறது

என்ன ஆனாலும் எந்த பதிலும் சொல்ல முடியாது என்பது போல மக்களின் வரிப்பணமான 13லட்சம் பணம் வீணாகிபோனது குறித்து விளக்கம் கேட்க முயன்றாலும் சில அதிகாரிகள் கும்பகர்ண தூக்கத்தில் இருப்பது போன்று கண்டும்காணாமல் இருந்துவருகின்றனர்.

ரோடு போட்டு 5 மாதம் ஆன நிலையில் அதில் ரோடு ரோலரும், JCB மட்டுமே செல்ல பயன்படும் அளவிற்கு இருப்பதால் இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

ஊருக்குள் உலா வரும் கரடி! பொதுமக்கள் அச்சம்…

இன்றைய தலைப்பு செய்திகள்