in ,

உக்ரைனுக்கு ஆண்டுக்கு 3 பில்லியன் பவுண்டுகள் நிச்சயம் வழங்கபடும் – பிரதம மந்திரி சர் கெய்ர்

உக்ரைனுக்கு ஆண்டுக்கு 3 பில்லியன் பவுண்டுகள் நிச்சயம் வழங்கபடும் – பிரதம மந்திரி சர் கெய்ர்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் சீனா மற்றும் ஈரானில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களினால் 2030 ஆம் ஆண்டளவில் செலவினங்கள் அதிகரிக்கும் என்று கூறிய கன்சர்வேடிவ் அரசாங்கத்தால் பிரதம மந்திரி சர் கெய்ர் அரசாங்கம் பெரும் அழுத்தத்தில் உள்ளது

ஸ்கை நியூஸின் ஆசிரியர் பெத் ரிக்பியிடம் பேசிய சர் கெய்ர், ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை அதிகரிக்க வேண்டும்” என்றும், நேட்டோ உச்சிமாநாட்டில் விவாதிக்கபட்டது ” ஆனால், “பாராளுமன்றத்தின் முடிவிற்குள்” பாதுகாப்புச் செலவீனத்தை GDP-யில் 2.5% ஆக உயர்த்த உறுதி எடுப்பாரா என்று திரும்பத் திரும்பக் கேட்டதற்கு, பிரதமர், “”நான் அதற்கு ஒரு தேதியை வைக்கப் போவதில்லை, ஏனென்றால் அது எங்கள் நிதி விதிகளுக்குள் இருக்கும்,” என்று அவர் தொடர்ந்தார்.

காலக்கெடுவை வழங்காமல் உறுதியளிப்பது “அர்த்தமற்றது” என்று சவால் விடுத்த பிரதமர், “அரசாங்கம் மாறுவதற்கு முன்பு கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சி அமைத்தவர்கள் நிதி பற்றாக்குறை.யை ஏற்படுத்தி விட்டனர். நாங்கள் மாறிவிட்டோம், அவர்கள் அரசியல் செய்த வழியை பின்பட்ற மாட்டோம்

முன்னாள் பிரதம மந்திரி ரிஷி சுனக் ஏப்ரல் மாதம் தனது அரசாங்கத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் பாதுகாப்பு செலவினங்களை தேசிய வருமானத்தில் 2.5% ஆக உயர்த்துவோம் என்று கூறினார்.

சர் கெய்ர் முதலில் ஒரு மூலோபாய பாதுகாப்பு மதிப்பாய்வை மேற்கொள்வதாகக் கூறினார் – இது முடிவடைய ஒரு வருடம் ஆகலாம்
2030 முதல் 2031 வரை உக்ரைனுக்கு ஆண்டுக்கு 3 பில்லியன் பவுண்டுகளோ அல்லது இராணுவ ஆதரவு தேவைபட்டாலும் நிச்சயம் வழங்குவோம் என்று முன்னாள் கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் உறுதிமொழியில் நாங்களும் உறுதியாக இருப்பதாகவும் Sir Keir கூறியுள்ளார்.

What do you think?

இன்றைய UK தலைப்புச் செய்திகள்

சிறைச்சாலை நெரிசலை தவிர்க்க புதிய திட்டங்களை அறிவிப்பாரா நீதித்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத்