புதுச்சேரி மூலக்குளத்தில் ரூ 3. 50 கோடி மதிப்பில் காவல் நிலைம்
புதுச்சேரி மூலக்குளத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி, ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் இயங்கி வந்தது. கட்டிடம் சேதமடைந்ததால் கடந்த பல வருடங்களால் காவல் நிலையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் அரசு நிதி ஒதுக்கி ரூ.3.50 கோடி செலவில் ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் புதியதாக கட்டி முடிக்கபட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
திறப்பு விழாவிற்கு புதுச்சேரி டிஜிபி ஸ்ரீனிவாஸ் தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு காவல்நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம் பாரதிய ஜனதா மாநில செயலாளர் சரவணன் உள்ளிட்ட கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பலர் இருந்தனர். முதல் இந்த புதிய கட்டிடத்திலேயே ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.