in

புதுச்சேரியில் இதே நிலை நீடித்தால் 2026ல் பாஜக மக்களை சந்திக்கவே முடியாது


Watch – YouTube Click

புதுச்சேரியில் இதே நிலை நீடித்தால் 2026ல் பாஜக மக்களை சந்திக்கவே முடியாது

 

புதுச்சேரியில் இதே நிலை நீடித்தால் 2026ல் பாஜக மக்களை சந்திக்கவே முடியாது. எம்எல்ஏக்களுக்கு கூடுதல் பதவி கொடுங்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் கூறியுள்ளார்.

புதுச்சேரி அரசுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ள பாஜக எம்எல்ஏக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து அவர்கள் புதுச்சேரியில் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் வெளியிட்டுள்ள வீடியோவில் மக்களுக்கு செய்த நல்ல காரியங்களுக்காக தான் பிரதமர் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்.

ஆனால் புதுச்சேரியில் ஆளுங்கட்சி தோற்றிருப்பதை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.

இதே நிலை நீடித்தால் 2026ல் மக்களை சந்திக்கவே முடியாது.ஏதாவது ஒரு மாற்றம் செய்யுங்கள்..இருக்கும் எம்எல்ஏக்களுக்கு கூடுதல் பதவி கொடுங்கள்..அதிக முக்கியத்துவம் கொடுங்கள்..தொகுதியில் மக்களுக்கு நிறைய செய்யட்டும்.

எங்களது நோக்கம் அரசையும் முதல்வரையும் எதிர்ப்பதில்ல.பாஜக தலைமை சொல்வதற்கு கட்டுப்படுவோம் என கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி மூலக்குளத்தில் ரூ 3. 50 கோடி மதிப்பில் காவல் நிலைம்

திருமணம் ஆக விடாமல் தடுக்கும் முதியவரால் இளைஞர்கள் கடும் பாதிப்பு கொந்தளித்த இளைஞர்கள்