in

கீழ்வேளூர் எம்எல்ஏ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

கீழ்வேளூர் எம்எல்ஏ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் (தனி) சட்டமன்ற தொகுதியின் தலைநகராக கீழ்வேளூர் உள்ளது.

கீழ்வேளூரை சுற்றி சிக்கல், திருக்கண்ணங்குடி, எட்டுக்குடி, திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் பிரசித்திபெற்ற ஆன்மீக தளங்கள் உள்ளது.

இந்த நிலையில் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் தவிர எந்த வித விரைவு ரயில்களும் நின்று செல்வதில்லை இதனால் அப்பகுதி மக்கள் சென்னை, பெங்களூர், கொச்சின் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ரயிலில் செல்ல வேண்டும் என்றால் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாகப்பட்டினத்திற்கும், திருவாரூருக்கும் சென்று ரயில் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் ரயில் பயணிகள் பெரும் அலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 30 க்கும் மேற்பட்ட முறை ரயில்வே கேட் மூடப்படுகிறது.

பயணிகள் ரயில் மட்டுமின்றி காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரயில்களும் செல்வதால் ஒவ்வொரு நாளும். பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி செல்லும் நேரங்களில் கேட் மூடப்படுவதால் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். அதே போன்று அவசர சிகிச்சைக்கு செல்லக் கூடிய ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களும் செல்ல முடியாமல் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இதனையொட்டி கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தியும், ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ரயில் நிலையம் முன்பாக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில்200 க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விரைவு ரயில் நின்று செல்ல வலியுறுத்தியும், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு ரயில்வே போலிசார் மற்றும் கீழ்வேளூர் போலீசார் 50 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

What do you think?

திருமணம் ஆக விடாமல் தடுக்கும் முதியவரால் இளைஞர்கள் கடும் பாதிப்பு கொந்தளித்த இளைஞர்கள்

பிரான்ஸ் நாட்டு தேசிய தினம் புதுச்சேரியில் கோலாகளமாக கொண்டாட்டம்